562

கொடியனெம் மிறையெனக் கண்ணீர்பரப்பிக், குடிபழி தூற்றுங்கோலே னாகுக " (புறநா.72 : 11 - 2) என்று கூறும் வஞ்சினத்தால் தனக்கு ஓர் பெயர்பெறுதலின் வஞ்சினத்தைப் பெயரென்றார்.

292 - 4. [ மின்னொளி யெறிப்பத் தம்மொளிமழுங்கி, விசிபிணி முழவின் வேந்தர் சூடிய, பசுமணிபொருத பரேரெறுழ்க் கழற்கால் :]

விசி பிணி முழவின் வேந்தர் தம்ஒளி மழுங்கி மின் ஒளி எறிப்ப சூடிய கழல் கால் -இறுகவலித்த வார்க்கட்டினையுடைய முரசுகளையுடைய வழிபாடில்லாதவேந்தர் தம் அரசிழத்தலின் தமக்குமுன்புள்ளவிளக்கங்கெட்டுப் பின்பு அவ் விளங்குகின்றவிளக்கம் தோன்றும்படியாகத் தம் முடிமேலே சூடினவீரக் கழலையுடைய காலினையும்,

பசு மணி பொருத பரு ஏர் எறுழ் கழல்- பசிய மணிகளோடே மாறு பட்ட பெரிய அழகிய வலியினையுடையகழலென்க.

295 - 7. பொன் தொடி புதல்வர் ஓடிஆடவும் முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும்செ சாந்து சிதைந்த மார்பின் - பொன்னாற் செய்ததொடியினையுடைய பிள்ளைகள் ஒடிவந்து ஏறி விளையாடுகையினாலும்மெய்ம்முழுதுமணிந்த அணிகலங்களையுடைய மகளிருடையதாமரை முகைபோலும் முலைகள் புணர்தலாலும் சிவந்தசந்தனமழிந்த மார்பினையும்,

297. ஒள் பூண் - ஒள்ளிய பேரணிகலங்களையும்,

298. அரிமா அன்ன அணங்கு உடைதுப்பின் - சிங்கவேற்றையொத்த வருத்தத்தையுடையவலியினையு முடைய,

299. திரு மா வளவன் - திருவின்பெருமையையுடைய கரிகாற் பெருவளத்தான்.

திண் காப்பு வாள் கழித்தேறிக்(226) காடுகொன்று நாடாக்கிக் (283) குளந்தொட்டு வளம்பெருக்கி(284) உறந்தைபோக்கி (285) குடிநிறீஇப் (286) பெருமன்னெயிலிலே(291) வாயிலொடு புழையமைத்து (287) ஞாயிறொறும் புதைநிறீஇ(288) இங்ஙனம் உருகெழுதாயம் ஊழி னெய்தித் (227) தென்னவன்திறல்கெடச்சீறி (277) அவன் திறையாகத் தந்தஅரசவுரிமைகளாற் பெற்றவையில் தான் மகிழ்தல் செய்யானாய்(228) மேலும் ஆசைமிக்கு இவன் மலையகழ்க்குவன்தூர்க்குவன் (271) வீழ்க்குவன் மாற்றுவனென்று உலகங்கூறும்படியாக (272) உழிஞை சூடி (235) யானையோடும் (231)புரவியோடுஞ் (232) சென்று முருக்கி (238) எடுப்பிப் (239)பெரும்பாழ் செய்தும் அமையானாய்ப் (270) பணிபொடுங்கக்(274) கேட்ப (275) வாடக் கூம்பப் (276) பொன்றச் (281) சாயத்(282) தான் முன்னிய துறைபோகையினாலே (273) வழிபடாஏனைவேந்தர் (293) தம்மொளிமழுங்கி மின்னொளியெறிப்பச்(292) சூடிய (293) காலினையும் (294) மார்பினையும் பூணினையும்(297) துப்பினையும் (298) உடைய கரிகாற் பெருவளத்தான்(299) என வினைமுடிக்க.