563

299 - 300. தெவ்வர்க்கு ஓக்கிய வேலினும்வெய்ய கானம் -1பகைவரைக் கொல்லுதற்கு அறுதியிட்டுவைத்தவேலினுங் கடியவாயிருந்தன காடு ;

300 - 301. அவன் கோலினும் தண்ணியதட மெல் தோளே - அவன் செங்கோலினுங்குளிர்ந்திருந்தன பெரிய மெல்லிய தோள்கள்,

நெஞ்சே (220) , இவளை நேசமுடன்கொண்டு செல்வோமென்னின் கானம் அவன் (300) ஓக்கிய(299) வேலினும் வெய்யவாயிராநின்றன (300) ; இவடோள்(301) அவன் (300) கோலினும் தண்ணிய (301) ; இவளைப்பிரியாதுறைதலில் யான் போதற்கு ஆற்றாவாயிராநின்ற; ஆதலாற் பட்டினம்பெறினும் (218) வயங்கிழை ஈண்டுப்பிரிந்திருப்ப (219) யான் நின்னுடன் வாரேன்; இனிஆண்டுப்போய் வாழ்வாயாக (220) என வினைமுடிக்க.

வாரேனென்றான், அவளை ஆற்றுவித்துப்பின்பு பிரிதல்கருதி.

அது, " செலவிடை யழுங்கல் செல்லாமையன்றே, வன்புறை குறித்தறவிர்ச்சி யாகும் " (தொல்.கற்பு. சூ. 44) என்பதனா லுணர்க.

சோழன் கரிகாற்பெருவளத்தானைக்கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலைக்குமதுரையாசிரியர் பாரத்து வாசி நச்சினார்க்கினியர்செய்தவுரை முற்றிற்று.

2முச்சக்கரமு * * * *கானெருப்புற்று.


1.முல்லை. 77, ந.

2.இது பொருநராற்றுப்படை இறுதியிலுள்ளமூன்றாம் வெண்பா.