564
பத்தாவது
1ம லை ப டு க டா ம்
திருமழை தலைஇய விருணிற விசும்பின்
விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்
திண்வார் விசித்த முழவொ டாகுளி
நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டின்
5மின்னிரும் பீலி யணித்தழைக் கோட்டொடு
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பி

1இந்நூல் கூத்தராற்றுப்படை யெனவும் வழங்கும் ; தொல். எச்ச. சூ. 66, சே. ந. தெய்வச் ; மேற்படி. புறத். சூ. 36, ந. ; மேற்படி. செய். சூ. 157, ந ; மேற்படி. மேற்படி. சூ. 228, இளம் ; இ - வி. சூ.300

பரந்த மொழியான் அடி நிமிர்ந்து வந்த தோலென்னும் வனப்பிற்கு இது மேற்கோள் ; தொல்.செய். சூ. 228, இளம்.

1 திருமழைதலைஇய : தலைப்பெயறலைஇய (முருகு. 9)

இருணிற விசும்பு : இருணிற விருவிசும்பு (சீகாளத்தி. தென்கயிலை. 62) ; முருகு.116, குறிப்புரை.

இவ்வடி கூத்தராற்றுப்படைக்கும் (தொல்.புறத். சூ. 36, ந.) , ஆசிரியம் அளவடியான் வந்ததற்கும்,முடுகுதற்கும் மேற்கோள் ; தொல். செய். சூ. 32,பேர். ந ; 67,பேர்.

2. ' கடுப்ப' என்பது மெய்யுவமத்திற்குரிய சொல்லென்பதற்கும் (தொல்.உவம. சூ. 15, இளம்.), சிறுபான்மை பயனுவமத்திற்கும் வருமென்பதற்கும் (தொல். உவம. சூ. 14, பேர்.) மேற்கோள்.

1 - 2. மதுரைக். 560.

3. ' முழ ' உகரம் பெறாமல் வந்ததற்கு மேற்கோள் ; தொல். குற்றியலுகர. 78,ந.

2 - 3. பண்ணமை முழவு (பதிற்.41 : 1)

1 - 3. மலைபடு. 532 ; முருகு. 121,குறிப்புரை.

5. (பி-ம்.) ' அணிதழை'

தாழ்பீலிப் பல்லியம் (பு- வெ. 24)

6 மலைபடு. 533 ; கண்ணறுத் தியற்றிய தூம்பு (பதிற். 41 : 4) ;கண்விடு தூம்பிற் களிற்றுயிர் தொடுமின் (புறநா.152 : 15)