565
னிளிப்பயி ரிமிருங் குறும்பரந் தூம்பொடு
விளிப்பது கவருந் தீங்குழ றுதைஇ
நடுவுநின் றிசைக்கு மரிக்குரற் றட்டை 
10கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி
நொடிதரு பாணிய பதலையும் பிறவுங்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்
கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பிற்
15படுத்துவைத் தன்ன பாறை மருங்கி
னெடுத்துநிறுத் தன்ன விட்டருஞ் சிறுநெறி
தொடுத்த வாளியர் துணைபுணர் கானவ
ரிடுக்கண் செய்யா தியங்குந ரியக்கு
மடுக்கன் மீமிசை யருப்பம் பேணா


7 இவ்வடியின் பாடபேதம்போல் தோன்றும் , "விளிப்பது பயிலுங் குறும்பர்துந் துமியொடு " என்ற அடியை வினைமுற்று வினையெச்சமாதற்கு மேற்கோள் காட்டுவர் ; நன். சூ. 350, மயிலை.

11. பாணிய பதலை : "பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் "(குறுந். 59 : 1 )

2 - 11. புறநா. 152 : 14 - 8.

11 - 2. மலைபடு. 142 - 4.

13. மலைபடு. 365 ; "காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை " (புறநா. 206 : 10)

3 - 13. "புணர்புரி நரம்பின் றீந்தொடை பழுனிய, வணரமை நல்யா ழிளையர் பொறுப்பப், பண்ணமை முழவும் பதலையும் பிறவுங், கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக், காவிற் றகைத்த துறைகூடு கலப்பையர் " (பதிற். 41 : 1 -5); "ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத், தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கி ", " சுவலழுந்தப் பலகாய, சில்லோதிப் பல்லிளைஞர் " (புறநா. 103 : 1 - 2, 139 : 1 - 2)

15. மதுரைக். 278, குறிப்புரை.

16. "விசும்பினுக் கேணி நெறியன்னசின்னெறி " (திருச்சிற். 149)

"செல்வர் மனத்தினோங்கி .............அஃகுநெறி " (சீவக. 1416) என்பதற்கு இவ்வடி மேற்கோள்.

15 - 6. தொல். கிளவி. சூ. 55, சே ; இ - வி. சூ. 321, மேற்.

17 - 8. பெரும்பாண். 39 - 41.

19. மீமிசை, ஒருபொருட் பன்மொழி என்பதற்கு மேற்கோள் ; யா - வி. சிறப்பு.