566
20திடிச்சுர நிவப்பி னியவுக்கொண் டொழுகித்
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவிற்
கடிப்பகை யனைத்துங் கேள்வி போகாக்
குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பி
னரலை தீர வுரீஇ வரகின்
25குரல்வார்ந் தன்ன நுண்டுளை யிரீஇச்
சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி
யிலங்குதுளை செறிய வாணி முடுக்கிப்
புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப்
புதுபுது போர்த்த பொன்போற் பச்சை
30 வதுவை நாறும் வண்டுகம ழைம்பான்
மடந்தை மாண்ட நுடங்கெழி லாகத்
தடங்குமயி ரொழுகிய வவ்வாய் கடுப்ப
வகடுசேர்பு பொருந்தி யளவினிற் றிரியாது


21. பொருந. 14 - 5, குறிப்புரை.

தொண்டுபடுதிவவு : "தொண்டுபடு திவவின் முண்டக நல்யாழ் " (ஆசிரியமாலை)

22. (பி-ம்.) ' கேள்வி போகாது ' (பொருந. 16 - 8) 

23. சுகிர்புரி நரம்பு : "சுகிர்புரி நரம்பின் சீறியாழ் " (புறநா. 109 : 15) ; "வீணைச் சுகிர்புரி நரம்பு " (சீவக. 728) ; முருகு 140 - 41

21 - 3. சீவக. 559, . மேற்.

24. இயைபு வண்ணத்திற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். செய். சூ. 219, பேர்.

24 - 5. பொரும்பாண். 7 - 8.

27. பொருந. 10.

28. இவ்வடி, வினையெச்சம் அகரவீறன்றிப் பிற ஈற்றால் முடிக்குஞ் சொல்லை விசேடித்து வருதற்கு மேற்கோள் ; தொல். வினை. சூ. 31, கல். ந.

30. பொருந. 19 - 20, குறிப்புரை ; "விழவொலி கூந்தல் " (ஐங்குறு. 306 : 4 ) ; " கடிமகள் கதுப்பி னாறி " , " வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள " (அகநா. 244 : 5, 378 : 2)

33. (பி-ம்.) 'பொருந்திய வளவினில்'

இன்னுருபு வருமிடத்து இன்சாரியை வந்ததற்கு இவ்வடி மேற்கோள; தொல்.புணரியல், சூ .29, .

31 - 3. பொருந. 6 - 8.