567
கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி
35நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக்
களங்கனி யன்ன கதழ்ந்துகிள ருருவின்
வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியா
ழமைவரப் பண்ணி யருணெறி திரியா
திசைபெறு திருவின் வேத்தவை யேற்பத்
40 துறைபல முற்றிய பைதீர் பாணரொ
டுயர்ந்தோங்கு பெருமலை யூறின் றேறலின்
மதந்தபு ஞமலி நாவி னன்ன
துளங்கியன் மெலிந்த கல்பொரு சீறடிக்
கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ
45விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்
திலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக்
கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழற்


35. (பி-ம்.) ' நுணங்கற னுவறிய'

37. " வணரமை நல்யாழ் " (பதிற். 41 : 2) ; " வணர்கோட்டுச் சீறியாழ்" (புறநா. 155 : 1)

வள்ளுயிர்ப் பேரியாழ் : குறிஞ்சிப். 100.

36 - 7. " களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ் " (புறநா. 127 : 1, 145 : 5)

42 - 3. பொருந. 42, குறிப்புரை.

44. சிறுபாண். 14 - 5, குறிப்புரை.

கதுப்பிகுத் தசைஇ : பட்டினப். 259.

45 - 6. சிறுபாண். 31.

44 - 6. இவ்வடிகளைப் பொருளானந்தமென்பர் ; யா - வி. ஒழிபு. 

41- 6. புறநா. 135 : 1 - 10.

47. " கயங்கண் டன்ன.............பெருமரக் குழாம் " (மலைபடு. 259 - 65) ; " பொய்கையும் போன்றதே , ஈச னெந்தை யினையடி நீழலே " (தே. திருநா.) ; " கொய்ம்மலர்க் காவகம்............தெண்கயம் புக்கது போன்றதே " (சீவக. 872) ; " அசோகந் தண்பொழில், மணிக்கயத் தியன்ற மறுவி றண்ணிழல் ", " அழல்கண் ணகற்றி நிழன்மீக் கூரி, நீர்புக் கன்ன நீர்மைத் தாகி" (பெருங். 1. 40 : 121 - 2, 2. 13 : 17 - 8) ; " வெவ்வாறு மெனக்குளிர்ந்து வெயிலியங்கா வகையியங்கும் விரிபூஞ் சோலை " (கம்ப. நாடவிட்ட. 22)