568
புனல்கால் கழீஇய மணல்வார் புறவிற்
புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக்
50கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ
தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்
மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்
கியாமவ ணின்றும் வருது நீயிருங்
கனிபொழி கானங் கிளையொ டுணீஇய
55 துனைபறை நிவக்கும் புள்ளின மானப்
புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
வனைபுனை யெழின்முலை வாங்கமைத் திரடோண்
மலர்போன் மழைக்கண் மங்கையர் கணவன்
முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பி
60னிசைநுவல் வித்தி னசையே ருழவர்க்குப்
புதுநிறை வந்த புனலஞ் சாயன்


48. பெரும்பாண். 380.

" நீர்கால் கழீஇய வார்மண லெக்கர் (பெருங். 1. 42 : 91)

50. மலைபடு. 569, குறிப்புரை.

தொல். புள்ளிமயங். சூ. 17, ந. மேற். 

53. சிறுபாண். 143 ; பெரும்பாண். 28.

51 - 3. பெரும்பாண். 427, குறிப்புரை. " மலையி னிழிந்து மாக்கட னோக்கி, நிலவரை யிழிதரும் பல்யாறு போலப், புலவ ரெல்லா நின்னோக்கினரே " (புறநா. 42 : 19 - 21) ; " கடுவரை நீரிற் கடுத்துவர " (பு. வெ. 11) ; " பெய்யு மாரியாற் பெருகு வெள்ளம்போய், மொய்கொள் வேலைவாய் முடுகு மாறுபோல் " (கம்ப. கையடை. 15)

54 - 5. பொருந. 64, குறிப்புரை ; " வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற்போகி " (புறநா. 47 : 1)

57. " வாங்கமை மென்றோன் " (பதிற். 12 : 22)

58. மலைபடு. 424 ; "கொடுங்குழை கணவ" , "திருந்திழை கணவ" , "வாணுதல் கணவ" , "நன்னுதல் கணவ", "ஆன்றோள் கணவ", "நல்லோள் கணவன்", "சேயிழை கணவ", "புரையோள் கணவ" , "சேயிழை கணவ" , "ஒண்டொடி கணவ" (பதிற். 14 : 15, 4 : 11, 38 : 10 , 42 : 7, 55 : 1, 61 : 4, 65 : 10, 70 : 16, 88 : 36, 90 : 50) ; "செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ "(புறநா. 3 : 6) 

59. மு. குறிஞ்சிப். 128.

60. "வித்திய பனுவல்" (புறநா. 237 : 5)

61. "வானி நீரினுந், தீந்தண் சாயலன்" (பதிற். 86 : 12 -3);