569
மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி
வின்னவி றடக்கை மேவரும் பெரும்பூ
ணன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்ளையொ
65டுள்ளினிர் சேறி ராயிற் பொழுதெதிர்ந்த
புள்ளினிர் மன்ற வெற்றாக் குறுதலி
னாற்றி னளவு மசையுநற் புலமும்
வீற்றுவளஞ் மலையுஞ் சோலையு மாபுகல் காணமுந் சோலையு மாபுகல் கானமுந்
70தொலையா நல்லிசை யுலகமொடு நிற்பப்
பலர்புறங் கண்டவ ரருங்கலந் தரீஇப்


" நீரினுஞ் சாய லுடையன் ", " வேனிற் புனலன்ன நுந்தை " (கலித். 42 : 20. 84 : 38 ) " நீரினு மினிய சாயற், பாரி " (புறநா. 105 : 7 - 8)

50-65. "கூத்தராற்றுப்படையுள், ' கலம்பெறு.........தலைவ, என அண்மைவிளியேற்று முன்னிலை குறித்து நின்ற ஒருமைப்பெயர், ' நீயிரும் .............சேறிராயின் ' எனப்பன்மையோடு முடிந்தது. இவ்வாறு வருங்காற் கூத்தரும் பாணரும் விறலியருமாகி ஆண்டுச் செல்வார் பலராயுழியே வரப் பெறுவதென்றும் தனியொருவனாயின் மயங்கப் பெறாதென்றுங் கொள்க" (தொல். எச்ச. சூ. 60, தெய்வச்.)

65-6. புள் : மலைபடு. 448 ; பெரும்பாண் . 155 ; புறநா.124 : 2.

ஒப்பு : பொருந. 59 ; " நல்ல சகுன மென்னவெதிர் கண்டு வந்தாய் நம்பிநீ.............புல்ல நின்றாய் " (பிரபு.பிரபுதேவர்வந்த. 47) ; " ஒரு நெறி யெதிர்ப்பா டுற்றது முன்னைப், பழுதறு பெருந்தவப் பயனது போலும் " (தணிகையாறு. 169 - 70)

68. மலைபடு. 462 ; " நாடென்ப நாடா வளத்தன " (குறள். 739) ; " நிலஞ் சுரக்கு நிறைவளம் " (கம்ப. நாடு. 38)

70. தொலையா நல்லிசை : " செல்லா நல்லிசை " (மலைபடு. 338) ; " கெடாஅ நல்லிசை நிலைஇ " , " நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத்து" (பதிற். 14 : 21, 86 : 5 ) ; " மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும்............சாவா வுடம்பெய்தினார் " (திரி. 16) ; " ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்த, வுருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து, மருவிய வுருவ மிங்கே மறைந்துபோமற்றை யாக்கை , திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே ", " பொன்று மிவ்வுட லின்பொருட், டென்று நிற்கு மிரும்புக, ழின்று நீர்கழிந் தீர்களாற், குன்றின் மேற்குடை வேந்திர்காள் " (சூளா. சீயவதை. 204, அரசியல், 226) ; பொருந. 176, ந. குறிப்புரை; பெரும்பாண். 466, ந. குறிப்புரை.