570
புலவோர்க்குச் சுரக்குமவ னீகை மாரியு
மிகழுநர்ப் பிணிக்கு மாற்றலும் புகழுநர்க்
கரசுமுழுது கொடுப்பினு மமரா நோக்கமொடு
75 தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாது சுரக்குமவ னாண்மகி ழிருக்கையு
நல்லோர் குழீஇய நாநவி லவையத்து
வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்
சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
80 நல்லிதி னியக்குமவன் சுற்றத்தொழுக்கமு
நீரகம் பனிக்கு மஞ்சுவரு கடுந்திறற்
பேரிசை நவிர மேஎ யுறையுங்


72. ஈகைமாரி : மலைபடு. 75 - 6, 580.

71 - 2. சிறுபாண். 247 - 8, அடிக் ; மதுரைக். 145 - 6, குறிப்புரை.
" ஆண்டுநீர்ப் பெற்ற தார மீண்டிவர், கொள்ளாப் பாடற் கெளிதினினீயும் " (பதிற். 48 : 5 - 6) ; " ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி, வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே ", " வேந்துதரு விழுக்கூழ் பரி சிலர்க் கென்றும், அருகா தீயும் வண்மை " (புறநா. 122 : 6 - 7, 320 : 16 - 7)

73. மதுரைக். 139 - 40.

73 - 4. மதுரைக். 131 - 2, குறிப்புரை.

75 - 6. " ஈகைமாரி ", " மழைசுரந் தன்ன வீகை நல்கி " (மலைபடு. 72, 580) ; சிறுபாண். 124, குறிப்புரை ; மதுரைக். 442, குறிப்புரை.) ; " ஆர்கலி வானந் தளிசொரிந் தாஅங், குறுவ ரார வோம்பா துண்டு, நகைவரார நன்கலஞ் சிதறி " (பதிற். 43 : 18 - 20) ; "நின் , சுரத்தலும் வண்மையு மாரியுள ", " அவன், வண்மைபோல் வானம் பொழிந்தநீர் " (பரி. 4 : 27, 22 : 7 - 8) ; " மழைசுரந் தன்ன வீகை " (அகநா. 238 : 13) ; " வானத் தன்ன வண்மையும் " , " மாரியன்ன வண்மை " , " வரையா மரபின் மாரி போல ............கொடைமடம் படுதல் " , " மாரி யீகை மறப்போர் மலையன் " , " மாரி யன்ன வண்மையிற் சொரிந்து " (புறநா. 55 : 15, 133 : 6, 142 : 3 - 5, 158 : 7, 397 : 16) ; "மாரியினேற்பார்க் கவைநல்கி " , " மாரிமழை வள்ளல்" , " மழைவள்ளல் " (சீவக. 365, 500, 899)

77 - 80. முருகு. 282 - 6.

82. மேவென்பது நசையென்னும் குறிப்பை உணர்த்துமென் பதற்கு மேற்கோள் ; தொல். உரி. சூ. 32, இளம். சே. தெய்வச். ந; இ - வி. சூ. 281.