| காரி யுண்டிக் கடவுள தியற்கையும் பாயிரு ணீங்கப் பகல்செய்யா வெழுதரு | 85 | ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பு மிகந்தன வாயினுந் தெவ்வர் தேஎ நுகம்படக் கடந்து நூழி லாட்டிப் புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக் கொடைக்கட னிறுத்தவவன் றொல்லோர் வரவு | 90 | மிரைதேர்ந் திவருங் கொடுந்தாண் முதலையொடு திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின் வரைபுரை நிவப்பின் வான்றோ யிஞ்சி யுரைசெல வெறுத்தவவன் மூதூர் மாலையுங் கேளினி வேளை நீ முன்னிய திசையே, | 95 | மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற் புதுவது வந்தன் றிதுவதன் பண்பே வானமின்னு வசிவு பொழிய வானா |
83. காரியுண்டிக் கடவுள் : சீவக. 670. 84 - 5. பாயிருள்.............ஞாயிறு : " பாயிருள் பருகிப், பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி " (பெரும்பாண். 1 - 2) " பாயிரு ணீங்கப் பல்கதிர் பரப்பி, ஞாயிறு குணமுதற் றோன்றியா அங்கு " , " மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட, ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றா, ருறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் " (பதிற். 59 : 5 - 6, 64 : 12 - 4) பகல் செய்யா வெழுதரு ஞாயிறு : பெரும்பாண். 441 - 2, ந. குறிப்புரை. 87. நுகம்படக்கடந்து : "நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி "(குறுந். 80 : 5) 89.கொடைக்கடனிறுத்த : மலைபடு. 543 ; பெரும்பாண். 446, குறிப்புரை. 90. கொடுந்தாண் முதலை : குறிஞ்சிப். 257. இரைதேர்ந்திவரும் ...............முதலை : " இரைதேர் முதலையும் " (சிலப். 13 :7) ] 91. கல்லகழ் கிடங்கு : மதுரைக். 730, குறிப்புரை. 92. " கோடுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி " (பதிற். 16 : 1)] வான்றோ யிஞ்சி : " விண்ணுற நிவந்த பண்ணமை படைமதில் "(பெருங். 3. 4 : 3)
|