| திட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப் பெயலொடு வைகிய வியன்க ணிரும்புனத் | 100 | தகலிரு விசும்பி னாஅல் போல வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை நீலத் தன்ன விதைப்புன மருங்கின் மகுளி பாயாது மலிதுளி தழாலி னகளத் தன்ன நிறைசுனைப் புறவிற் | 105 | கௌவை போகிய கருங்காய் பிடியேழ் நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண் பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக் கொய்பத முற்றன குலவுக்குர லேனல் விளைதயிர்ப் பிதிர்வின் வீயுக் கிருவிதொறுங் | 110 | குளிர்புரை கொடுங்காய் கொண்டன வவரை மேதி யன்ன கல்பிறங் கியவின் வாதிகை யன்ன கவைக்கதி ரிறைஞ்சி |
97 - 8. மதுரைக். 10 - 11. 100. அகலிரு விசும்பு : பெரும்பாண். 1; மதுரைக். 267. 101. புன்கொடி முசுண்டை : நெடுநல் : 13. 100 - 101. மதுரைக் 280 - 81. ' ஆரல் ' ஆலென்று வந்த இடைக் குறைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; யா - வி. ஒழிபு. சூ. 2 ; யா - கா. ஒழிபு. 8, உரை. 99 - 101. ஊனந் தோன்றிய ஆனந்தவுவமை யென்பர் ; யா - வி. ஒழிபு. சூ. 3. 102. மதுரைக். 279. 105. கௌவை : மதுரைக். 271. 105 - 6. ஐகார ஒளகாரக் குறுக்கமும் நேரசையென்பதற்கு மேற்கோள் ; யா - வி. அசை. சூ. 2. 108. (பி-ம்.) ' குவவுக்குரலேனல்' 107 - 8. தினைக்கதிர்க்கு யானைக்கை உவமை : குறிஞ்சிப். 35 - 8, குறிப்புரை. 109 - 10. தினையரிதாளில் அவரை விளைதல் : " பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற், கொழுங்கொடி யவரை பூக்கும் " (குறுந். 82 : 4 - 5) ; " சிறுதினை கொய்த விருவி வெண்காற், காய்த்த வவரை " (ஐங். 286 : 1 - 2) 111. " எருமை யன்ன கருங்கல் " (புறநா. 5 : 1) 112. வடசொல் சிதைந்து வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; தொல். எச்ச. சூ. 6, ந ; இ - வி. சூ. 175.
|