573
யிரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே
பால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு
115வாலிதின் விளைந்தன வைவனம் வெண்ணெல்
வேலீண்டு தொழுதி யிரிவுற் றென்னக்
காலுறு துவைப்பிற் கவிழ்க்கனைத் திறைஞ்சிக்
குறையறை வாரா நிவப்பி னறையுற்
றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே
120புயற்புனிறு போகிய பூமலி புறவி
னவற்பதங் கொண்டன வம்பொதித் தோரை
தொய்யாது வித்திய துளர்படு துடவை
யையவி யமன்ற வெண்காற் செறுவின்
மையென விரிந்தன நீணறு நெய்தல்
125செய்யாப் பாவை வளர்ந்துகவின் முற்றிக்
காயங் கொண்டன விஞ்சி மாவிருந்து
வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை


113. " இரும்புகவர் கொண்ட வேனற் பெருங்குரல் " (நற். 194 : 9)

112 - 3. கவைக்கதிர் ...........வரகு : " கவைக்கதிர் வரகின் சீறூர் "(அகநா. 384 : 6) ; " கவைக்கதிர் வரகும் " (பெருங். 1. 49 : 105) 

115. (பி-ம்.) ' ஐவன வெண்ணெல் '

118 - 9. அறையுற்று ............. .அலமருங்கரும்பு : " அறைக்கரும்பு " (பொருந. 193) ; " அறையுறு கரும்பு " (பதிற். 75: 6 ; பெருங். 1. 48 : 146) 

116 - 9. கரும்புக்கு வேல் உவமை : " கரும்பின் , வேல்போல் வெண்முகை " (நற். 366 : 7 - 8) ; " தோடுகொள் வேலின் றோற்றம் போல, வாடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும் " (புறநா. 35 : 9 - 10) 

122. " ஏறு பொருதசெறு வுழாதுவித் துநவும் " (பதிற். 13 : 2)

துளர்படு துடவை : " தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை " (பெரும்பாண். 201) ; " துடவையஞ் சிறுதினைத், துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை " (குறுந். 392 : 4 - 5)

124 . " மைவிரிந்தன நீலமும் " (சூளா. நாடு. 11)

125 - 6. " பாவை யிஞ்சி " (பெருங். 1 . 51 : 23)

127, பிடிமுழந்தாள் : பெரும்பாண். 53, குறிப்புரை ; கலித் . 50 : 2.

128. மதுரைக். 534, குறிப்புரை.