| காழ்மண் டெஃகங் களிற்றுமுகம் பாய்ந்தென | 130 | வூழ்மல ரொழிமுகை யுயர்முகந் தோயத் துறுகல் சுற்றிய சோலை வாழை யிறுகுகுலை முறுகப் பழுத்த பயம்புக் கூழுற் றலமரு முந்தூ ழகலறைக் கால மன்றியு மரம்பயன் கொடுத்தலிற் | 135 | காலி னுதிர்ந்தன கருங்கனி நாவன் மாறுகொள வொழுகின வூறுநீ ருயவை நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந் துண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந் தரலை யுக்கன நெடுந்தா ளாசினி | 140 | விரலூன்று படுக ணாகுளி கடுப்பக் |
129." எடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புணர்கூர்ந்து, பிடிக்கண மறந்த வேழம் "(முல்லை. 68 - 9) காழ் மண்டெஃகம் : மதுரைக் . 739, குறிப்புரை ; " மடையமை திண் சுரை மாக்காழ் வேலொடு " , " மாக்காழ் நெடுவேல் " (அகநா. 119 : 13, 368 : 18) ; " வேலே..........இருங்காழொடு.........நிலைதிரிந் தனவே " (புறநா. 97 : 4 - 7) 131. " சோலை வாழை : " சோலை வாழைச் சுரிநுகும்பு " (குறுந். 308 :1) 134. " கால மன்றியு மரம்பயம் பகரும், யாண ரறாஅ வியன் மலை " (புறநா. 116 13 - 4) ; " பருவ மன்றியும் பயன்கொடுப் பறாஅப், பலவு மாவுங் குலைவளர் வாழையு, மிருங்கனி நாவலு மிளமா துளமும் " (பெருங். 2. 20 : 61 - 3) ; " காலமன்றியுங் கனிந்தன கனி ", "தீங்கனி, கால மின்றிக் கனிவது காண்டிரால் " (கம்ப. வனம்புகு. 44, நாடவிட்ட.18) 135. கருங்கனி நாவல் : புறநா. 177 : 11 137." கூவை நூறுங் கொழுங்கொடிக் கவலையும் " (சிலப். 25 : 42) ; " பாவை யிஞ்சியுங் கூவைச் சுண்ணமும் " (பெருங். 1. 51 : 23) 138. " உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை" (மலைபடு. 445) ; " உண்ணுநர்த் தடுத்த, சாரற் பலவின்சுளை " (அகநா. 2 : 2 - 3) 138 - 9. புண்ணரிந்துக்கன ஆசினி : " கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின் " (மலைபடு. 292) ; " பலாஅம் பழுத்த பசும்புண்ணரியல் " (பதிற். 61 : 1) ; " அள்ளிலைப் பலவி னளிந்துவீழ் சுளையும் " (சீவக. 2109)
|