575
குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்துக்
கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிச்
சுரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி
முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப் பலவே
145தீயி னன்ன வொண்செங் காந்தட்
டூவற் கலித்த புதுமுகை யூன்செத்
தறியா தெடுத்த புன்புறச் சேவ
லூஉ னன்மையி னுண்ணா துகுத்தென
நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்
150வெறிக்களங் கடுக்கும் வியலறை தோறு
மணவில் கமழு மாமலைச் சாரற்
றேனினர் கிழக்கின ரூனார் வட்டியர்


141. " குடிஞை யிரட்டுங் கோடுயர் நெடுவரை " (நன். சூ. 458, மயிலை. மேற்.) ; " குடிஞை யிரட்டுங் குளிர்வரை " (பழ. 246)

140 - 41. பொருந. 210, குறிப்புரை.

143. மலைபடு. 511.

143 - 4. மலைபடு. 11 - 2.

145. மலைபடு. 149 ; முருகு. 43, குறிஞ்சிப் 90, குறிப்புரை ; " கார்த்திகை ...........விளக்கிற் பூத்தன தோன்றி " (கார். 26) ; " வழகிதழ்க் காந்தண்மேல் வண்டிருப்ப வொண்டீ, முழுகியதென் றஞ்சி முது மந்தி - பழகி, யெழுந்தெழுந்து கைநெறிக்கு மீங்கோயே திங்கட், கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று " (ஈங்கோய். 70) ; " தண்காந்த ளம்பூத், தழல்போல விரியும் " (பாண்டிக். ) ; "தோன்றி வில்விளக்கே பூக்கும் " (நள. கலித்தொடர். 28) ; " குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய, வழலெரியின் மூழ்கினவால் " (யா - வி. சூ. 67, மேற்.)

ஈகாரவீறு வேற்றுமைக்கண் இன்பெற்று வந்ததற்கும், இரண்டாம் வேற்றுமை யுருபு அன்ன வென்பதையுங் கொண்டு முடியுமென்பதற்கும் இவ்வடி மேற்கோள் ; (தொல். குற்றியலுகர. சூ. 78, க்ஷ. எச்ச. 13, ந.) 

145 - 6. தொல். உவம. சூ. 16, பேர். மேற்.

149 -50. மதுரைக். 279 - 84, குறிப்புரை. " பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்த, ராடுகளங் கடுக்கும் " (புறநா. 28 : 13 -4.)

145 - 50. பரிசிற் பொருளானந்தத்திற்கு இவ்வடிகளை மேற்கோள் காட்டுவர் ; யா - வி. ஒழிபு. சூ. 3.

151. அகநா. 107 : 21.

152. ஊனார்வட்டி : " வேட்டுவன் மான்றசை சொரிந்த வட்டியும் " (புறநா. 33 : 1 - 2)