| சிறுகட் பன்றிப் பழுதுளி போக்கிப் பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத் | 155 | தூவொடு மலிந்த காய கானவர் செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே யிரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவி ரன்றவ ணசைஇ யற்சேர்ந் தல்கிக் கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து | 160 | சேந்த செயலைச் செப்பம் போகி யலங்குகழை நரலு மாரிப் படுகர்ச் சிலம்படைந் திருந்த பாக்க மெய்தி நோனாச் செருவின் வலம்படு நோன்றாண் மான விறல்வேள் வயிரிய மெனினே | 165 | நும்மில் போல நில்லாது புக்குக் கிழவிர் போல கேளாது கெழீஇச் சேட்புலம் பகல வினிய கூறிப் பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவி | 170 | ரேறித் தரூஉ மிலங்குமலைத் தாரமொடு |
150 - 157. ஆற்றுப்படையுள் ஒருமைச்சொல் பன்மையோடு முடிவதற்கு, ' கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ........இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர் ' என்னும் பகுதி மேற்கோள்; தொல். எச்ச. சூ. 66, இளம், சே. ந ; இ - வி. சூ. 300. 158. மலைபடு. 256. 159 - 60. " செந்நீ யொண்பூம் பிண்டி " (மதுரைக். 700 - 701) ; " ஏரியவி ருருவி னங்குழைச் செயலை ", " செந்நீ யொண்பூம் பிண்டி " (குறிஞ்சிப். 105 , 118 - 9) ; " அணிமல ரசோகம் பூத்தன......... அழற்கணை தரித்த போன்றவே " (நைடதம், அன்னத்தைக் கண்ணுற்ற. 36) 162- 3. (பி-ம்.) ' எய்தி னோனாச் செருவின் ' 164 . மானவிறல்வேள் மதுரைக். 344. 165. மலைபடு. 491 ; " எங்கோ னிருந்த கம்பலை மூதூ, ருடையோர் போல விடையின்று குறுகி " (புறநா.54 : 1 - 2) 169. ' குரு ' என்னும் பண்புரிச்சொல் நிறத்தையுணர்த்தி நீண்டு வருவதற்கு இவ்வடி மேற்கோள் ; (தொல். உரி. சூ. 5, ந.) 164 - 9. பெரும்பாண். 103 - 5.
|