577
வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல்
குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப்
பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர
வருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்
175 வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனி
னின்புளிக் கலந்து மாமோ ராகக்
180கழைவளர் நெல்லி னரியுலை யூழ்த்து
வழையமை சாரல் கமழத் துழைஇ
நறுமல ரணிந்த நாறிரு முச்சிக்
குறமக ளாக்கிய வாலவிழ் வல்சி


171. (மலைபடு. 522 ; முருகு. 195, குறிப்புரை.)

தேக்கட்டேறல் : " தேம்பிழி தேறல் " (குறிஞ்சிப். 155)

172. (பி-ம்.) 'குழைவின்று பருகி'

173. பொருந. 94, குறிப்புரையையும், மதுரைக். 669, குறிப்புரையையும் பார்க்க.

174. அருவிதந்த பழம் : " ஆசினி முதுசுளை கலாவ............இழி தருமருவி " (முருகு.301 - 16) ; " பூநாறு பலவுக்கனி, வரையிழி யருவி யுண்டுறைத் தரூஉம் "(குறுந். 90 : 4 - 5)

176. " முளவுமா வல்சி " (ஐங். 364 : 1, பி - ம்.)

முளவுமாத் தொலைச்சிய : " முளவுமாத் தொலைச்சுங் குன்ற நாட " (அகநா. 182 : 8) ; " முளவுமாத் தொலைச்சிய முழுச்சொ லாடவர்" (புறநா. 325 : 6)

177. " முடுவ றந்த பைந்நிணத் தடியொடு " (மலைபடு. 563)

176 - 7. தொல். குற்றியலுகர. சூ .78, இளம். ந. ; இ - வி. சூ. 90, மேற்.

179. இன்புளி : "தீம்புளி" (மதுரைக். 318)

181. (பி-ம்.) ' வழையமல்'

வழையமை சாரல் : " நாகநெடுவழி " (சிறுபாண். 88) ; " வழையமல் வியன்காடு "(பதிற். 41 : 13) ; " வழையமை நறுஞ்சாரல் " (கலித். 53 : 1 ) ; " வழையம லடுக்கத்து " (அகநா. 328 : 1)

176 - 83. நற். 85 :8 - 11.

179 - 83. இன்புளிக் கலந்து..............குறமகளாக்கிய வல்சி : " எயிற்றிய ரிட்ட வின்புளி வெஞ்சோறு " (சிறுபாண். 175)