| யகமலி யுவகை யார்வமொ டளைஇ | 185 | மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் செருச்செய் முன்பிற் குருசின் முன்னிய பரிசின் மறப்ப நீடலு முரியி ரனைய தன்றவன் மலைமிசை நாடே நிரையிதழ்க் குவளைக் கடிவீ தொடினும் | 190 | வரையர மகளி ரிருக்கை காணினு முயிர்செல வெம்பிப் பனித்தலு முரியிர் பலநா ணில்லாது நிலநாடு படர்மின் விளைபுன நிழத்தலிற் கேழ லஞ்சிப் புழைதொறு மாட்டிய விருங்க லரும்பெறி | 195 | யுடைய வாறே நள்ளிரு ளலரி விரிந்த விடியல் வைகினிர் கழிமி னளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின் முரம்புகண் ணுடைந்த பரலவற் போழ்விற் கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே | 200 | குறிக்கொண்டு மரங்ங் கொட்டி நோக்கிச் செறிதொடி விறலியர் ைதொழூஉப் பழிச்ச வறிதுநெறி யொரீஇ வலஞ்செயாக் கழிமின் புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவ ருயர்நிலை யிதண மேறிக் கைபுடையூஉ | 205 | வகன்மலை யிறும்பிற் றுவன்றிய யானைப் பகனிலை தளர்க்குங் கவணுமிழ் கடுங்க லிருவெதி ரீர்ங்கழை தத்திக் கல்லெனக் |
185. சிறுபாண். 192. 179- 85. சிறுபாண். 189 - 92. 192. (பி-ம்.) ' நிலனொடு படர்மின் ', 'சில நாள் படர்மின் ' 193. " இரும்புன நிழத்தலின் " (குறிஞ்சிப். 157) 194.கற்பொறி : " சிறுபொறி மாட்டிய பெருங்க லடாஅர்" (நற். 119 : 2) ; " பொறியறிந்து மாட்டிய, பெருங்க லடாரும் " (புறநா. 19 : 5 - 6) ; " கொல்புலி படுக்கும் பெருங்க னீளடார் " (கூர்ம. சம்புத்தீவின். 29) 201. கைதொழூஉப்பழிச்ச : (பெரும்பாண். 463, குறிப்புரை.) 206. (பி-ம்.) ' நிலைதவிர்க்கும் '
|