| கருவிர லூகம் பார்ப்போ டிரிய வுயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன | 210 | வரும்விசை தவிராது மரமறையாக் கழிமி னுரவுக்களிறு கரக்கு மிடங்க ரொடுங்கி யிரவி னன்ன விருடூங்கு வரைப்பிற் குமிழி சுழலுங் குண்டுகய முடுக்க ரகழிழிந் தன்ன கான்யாற்று நடவை | 215 | வழூஉமருங் குடைய வழாஅ லோம்பிப் பரூஉக்கொடி வலந்த மதலை பற்றித் துருவி னன்ன புன்றலை மகாரோ |
208." கருவிர லூகம் விளையாடும் " (தே. திருஞா. சிராப்பள்ளி) 203-9. குறவர் கவணெறிதலும் அதற்கு யானை முதலியன அஞ்சுதலும் : "இலங்கொளி மருப்பிற் கைம்மா வுளம்புநர், புலங்கடி கவணையிற் பூஞ்சினை யுதிர்க்கும், விலங்குமலை" , "பிடியொடு மேயுஞ் செய்புன் யானை, அடியொதுங் கியக்கங் கேட்ட கானவன், நெடுவரை யாசினிப் பணவை யேறிக், கடுவிசைக் கவணையிற் கல்கை விடுதலி, னிறுவரை வேங்கையி னொள்வீ சிதறி, யாசினி மென்பழ மளிந்தவை யுதிராத், தேன்செ யிறாஅ றுளைபடப் போகி, நறுவடி மாவின் பைந்துண ருழக்கிக், குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப், பலவின் பிழத்துட்டங்குமலை" (கலித். 23 : 1 - 3, 41 : 7 - 16) ; "இரவின் மேய மரூஉம் யானைக், கால்வ லியக்க மொற்றி நடுநாள், வரையிடைக் கழுதின் வன்கைக் கானவன், கடுவிசைக் கவணி ணெறிந்த சிறுக, லுடுவுறு கணையிற் போகிச் சாரல், வேங்கை விரியிணர் சிதறித் தேன்சிதையூஉப், பலவின் பழத்துட் டங்கு, மலைகெழு நாடன் " , " காம்பின், வனைகழை யடைந்த கவண்விசைக் கடியிடிக், சுனைசுட ரமையத்து வழங்கல் செல்லா, திரவுப் புன மேய்ந்த வுரவுச்சின வேழம் " , " தினைமே யானை யினனிரிந்தோடக், கல்லுயர் கழுதிற் சேணோ னெறிந்த, வல்வாய்க் கவணின் கடுவெடி யொல்லென, மறப்புலி யுரற வாரணங் கதற, நனவுறு கட்சி நன்மயி லால, மலையுடன் வெரூஉ மாக்கல் வெற்பின் " (அகநா. 292 : 8 - 15, 309 : 12 - 5, 392 : 11 - 8) ; " இடுதினை தின்வேழங் கடியக் குறவர், வெடிபடு வெங்கவண்க லூன்ற - நெடுநெடென, நீண்டகழை முத்து திர்க்கு மீங்கோயே " (ஈங்கோய். 7) 211. முதலை யானையை விழுங்கல் : " களிறட்டு விழ்க்கு , மீர்ப்புடைக் கராஅத் தன்ன " (புறநா. 104 : 3 - 4) 213. மலைபடு. 474 - 6. 217. புன்றலை மகார்: மலைபடு. 253.
|