பத்துப்பாட்டு இனித் தாமரையென்னும் எண்ணைத்தந்த அழிவில்லாத ஊழிக் காலத்தையுடைய அயனுமாம். பயந்த ஒருவனென்க. சாபமென்றது : பிள்ளையார் அசுரரையழித்துத் தேவரைக் காத்தற்கு இந்திரன்மகள் தெய்வயானையாரை அவர்க்குக் கொடுத்தவிடத்தே, பிள்ளையார் தம் கையில் வேலை நோக்கி, "நமக்கு எல்லாந்தந்தது இவ்வேல்" என்ன, அருகிருந்த அயன், "இவ்வேலிற்கு இந்நிலை என்னால் வந்ததன்றோ" என்றானாக, "நங்கையில் வேலுக்கு நீ கொடுப்பதொரு சத்தியுண்டோ" என்று கோபித்து, "இங்ஙனங் கூறிய நீ மண்ணிடைச் செல்வாய்"என்ற சாபத்தை. 1காண் வர - அழகு தோன்ற, 166.2பகலில் தோன்றும் இகல் இல் காட்சி - ஒரு பொருள் பலவாமாறு பகுத்துக்காண்டற்கண் வேறுபடத் தோன்றும் தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய, 167. 3நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு - நான்காகிய வேறுபட்ட இயல்பினையுடைய முப்பத்துமூவரும், என்றது : ஆதித்தன், உருத்திரன், வசு, மருத்துவனென்னும் ஒரோவோர் பொருள்கள் பலவாகப் பகுக்குங்காற் பன்னிருவர் பதினொருவர் எண்மர் இருவராகப் பகுக்க, நான்கு கூறாய் முப்பத்துமூவ ராயினாரென்றவாறு; பதினொருவராகிய மூவரென்க. அவர் ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், வசுக்கள் எண்மரும், மருத்துவர் இருவருமாம். ஒடு : எண்ணொடு: 168. 4ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் - பதினெண் வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்றவரும், என்றது பதினெண்கணங்களை. அவர் தேவரும், அசுரரும், தைத்தியரும், கருடரும், கின்னரரும், கிம்புருடரும், இயக்கரும், விஞ்சையரும், இராக்கதரும், கந்தருவரும், சித்தரும், சாரணரும், பூதரும்,
1. காண்வர - காட்சிபெற (வேறுரை) 2.பகலாகிய அருக்கனைப் போலத் தோன்றாநின்ற (வேறுரை) 3.நால் வேறு இயற்கை - சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் (வேறுரை) 4. பதினெண் பூமியின் மிக்க பதங்களைப் பெற்றுடையர் (வேறுரை)
|