| டொருவி ரொருவி ரோம்பினர் கழிமி னழுந்துபட் டலமரும் புழகமல் சாரல் | 220 | விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா வழும்புகண் புதைத்த நுண்ணீர்ப் பாசி யடிநிலை தளர்க்கு மருப்பமு முடைய முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோ டெருவை மென்கோல் கொண்டனிர் கழிமி | 225 | னுயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத் தாரொடு பொலிந்த வினைநவில் யானைச் சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி யோரியாற் றியவின் மூத்த புரிசைப் | 230 | பராவரு மரபிற் கடவுட் காணிற் றொழாநிர் கழியி னல்லது வறிது நும்மியந் தொடுத லோம்புமின் மயங்குதுளி மாரி தலையுமவன் மல்லல் வெற்பே யலகை யன்ன வெள்வேர்ப் பீலிக் | 235 | கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினுங் கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன நெடுங்கழைக் கொம்பர்க் கடுவ னுகளினு |
218.(பி-ம்.) ' ஓம்பினர் கழிமின் ' நன் - வி. சூ. 380, மேற். 50 - 218. உயர்திணை யொருமையிற் பன்னை மயங்கியதற்கு இவ்வடிகள் மேற்கோள்; நன். சூ. 379, மயிலை. 219. புழகு : குறிஞ்சிப். 96, குறிப்புரை. 226. மதுரைக். 183, குறிப்புரை. வில்லுமிழ் கடுங்கணை : "விற்பழுத் துமிழ்ந்த வெய்ய வெந்நுனைப் பகழி " (சீவக. 435) ; " விற்பழுத் துமிழும் வெய்யகணை " (கூர்ம. இராமன் வனம்புகு. 56) 227. மதுரைக். 47, குறிப்புரை ; நெடுநல். 169, குறிப்புரை. 229. (பி-ம்.) ' இயவிற்புரிசை மூத்த ' 231. (பி-ம்.) ' தொழாநீர் கழிமின் ' 236 - 7. சிறுபாண். 56, குறிப்புரை ; " குரங்கன்னபுன் குறுங்கூளியர் " (புறநா. 136 : 13); அகநா. 206 : 3 - 6.
|