581
நேர்கொ ணெடுவரை நேமியிற் றொடுத்த
சூர்புக லடுக்கத்துப் பிரசங் காணினு
240 ஞெரேரென நோக்க லோம்புமி னுரித்தன்று
நிரைசெலன் மெல்லடி நெறிமாறு படுகுவிர்
வரைசேர் வகுந்திற் கானத்துப் படினே
கழுதிற் சேணோ னெவொடு போகி
யிழுதி னன்ன வானிணஞ் செருக்கி
245நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பி
னெறிக்கெடக் கிடந்த விரும்பிண ரெருத்தி
னிருடுணிந் தன்ன வேனங் காணின்
முளிகழை யிழைந்த காடுபடு தீயி
னளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து
250துகளறக் துணிந்த மணிமரு டெண்ணீர்க்
குவளையம் பைஞ்சுனை யசைவிடப் பருகி
மிகுத்துப்பதங் கொண்ட பரூஉக்கட் பொதியினிர்


239. சூர்புகலடுக்கம் : " சூருடை யடுக்கத்த "(நற். 359 : 9) ; " சூருறை குன்றிற் றடவரை " (பரி. 19 : 23)

238 - 9. மலைபடு 524 - 5 ; முருகு. 229 - 300.

240. (பி-ம்.) ' ஞெரோவென '

ஞெரேரென : மலைபடு. 579.

242. (பி-ம்.) 'வகுந்தின் கானத்து '

வகுந்து வழியென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; (சிலப். 15 : 14 - 9, அடியார்.)

243. கழுதிற்சேணோன் : குறிஞ்சிப். 40 - 41.

247. வழக்கொடு பட்ட மரபு பிறழவும், செய்யுளின்பம்படின் அவ்வாறு செய்க வென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். மரபு. சூ. 1, பேர்.)

248. (பி-ம்.) ' முளிகழை யிசைந்த '

மதுரைக். 302, குறிப்புரை.

249. மிசைதல் வேறுவினைப் பொதுச்சொல் அன்றென்று கூறி இதனை மேற்கோள் காட்டினர் ; தொல். கிளவி. சூ. 46, ந.

250. மணிமருடெண்ணீர் : சிறுபாண். 152, குறிப்புரை. ; மதுரைக் 351, குறிப்புரை.

251. " குவளைப் பைஞ்சுனை பருகி " (புறநா. 132 : 5)