| புட்கை போகிய புன்றலை மகாரோ டற்கிடை கழித லோம்பி யாற்றநு | 255 | மில்புக் கன்ன கல்லளை வதிமி னல்சேர்ந் தல்கி யசைத லோம்பி வான்கண் விரிந்த விடியலேற் றெழுந்து கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின் கயங்கண் டன்ன வகன்பை யங்கண் | 260 | மைந்துமலி சினத்த களிறுமத னழிக்குந் துஞ்சுமரங் கடுக்கு மாசுணம் விலங்கி யிகந்துசேட் கமழும் பூவு முண்டோர் மறந்தமை கல்லாப் பழனு மூழிறந்து பெரும்பயங் கழியினு மாந்தர் துன்னா | 265 | ரிருங்கால் வீயும் பெருமரக் குழாமு |
253. புன்றலைமகார் : மலைபடு. 217. இவ்வடி , புள் வளையென்னும் பொருளில் வருமென்பதற்கு மேற்கோள்; சீவக. 2591, ந. 256. மலைபடு. 158. 260 - 61. யானையை விழுங்கும் பாம்பு : " களிறு பாந்தட் பட்டென ", "களிறகப் படுத்த பெருஞ்சின மாசுணம் " (நற். 14 : 8, 261 : 6) " வெண்கோட் டியானை விளிபடத் துழவு, மகல்வாய்ப் பாந்தள் " (அகநா. 68 : 19 - 20); " பரிய களிற்றை யரவு விழுங்கி மழுங்க " (திருஞா. தே.) ; " குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பை " (திருச்சிற். 21) : " களிறென்று பெரிய மாசுணம் .............பெயர்தரு பிருதியெம் பெருமானை " (பெரியதிரு. 1. 2 : 10) ; " புழுங்குவெம் பசியொடு புரளும் பேரரா, விழுங்கவந் தெதிரெதிர் விரித்த வாயின்வாய், முழங்குதிண் கரிபுகும் " , " மதக்கதமா, வடங்கு பேழ்வயிற் றரவு " , " இடிகொள் வேழத்தை யெயிற்றொடு மெடுத்துடன் விழுங்குங், கடிய மாசுணம் " , " பெரிய பாந்தள், மறங்கிளர் மாண யானை வயிற்றின வாக வாய்சோர்ந், துறங்கின " (கம்ப. தாடகை. 11, சித்திரகூட. 4, 35, சேதுபந்தன. 20) ; " கைந்நாக மேமேயு மாநாகம் " (தக்க. 543) 262. சேட் கமழும்பூ : " சேணாறு பிடவம் " (முல்லை. 25) 262 - 3. மலைபடு 282 - 3. 265. (பி-ம்.) ' இருங்கோல் ' 259 - 65. கயங்கண்டன்ன.........பெருமரக்குழுாம் : மலைபடு. 47, குறிப்புரை.
|