| குறியவு நெடியவு மூழிழிபு புதுவோர் நோக்கினும் பனிக்கு நோய்வகூ ரடுக்கத் | 290 | தலர்தாய வரிநிழ லசையினி ரிருப்பிற் பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின் மலைமுழதுங் கமழு மாதிரந் தோறு மருவி நுகரும் வானர மகளிர் | 295 | வருவிசை தவிராது வாங்குபு குடைதொறுந் தெரியிமிழ் கொண்டநும் மியம்போ லின்னிசை யிலங்கேந்து மருப்பி னினம்பிரி யொருத்தல் விலங்கன் மீமிசைப் பணவைக் கானவர் புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல் | 300 | சேயளைப் பள்ளி யெஃகுறு முள்ளி னெய்தெற விழுக்கிய கானவ ரழுகை கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பி னெடுவசி விழுப்புண் டணிமார் காப்பென வறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாட |
288 - 9. " குறியவு நெடியவுங் குன்று " (சிலப். 27 : 153 ; மணி. 6 : 58) 290. வரிநிழல் : பெருந. 51 ; சிறுபாண். 11 - 2, குறிப்புரை. 292. மலைபடு. 138 - 9, குறிப்புரை. கலைதொடு பெரும்பழம் : " கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம் " (குறுந். 342 : 1 ) 294. (பி-ம்.) 'அருவி நுகக்கும் ' " ஆழருவி யரமகளி ராடுபவே " (கலித். 40 : 23); அமர நாடியர் துன்னியா டிடங்களும் " (கம்ப. பிலநீங்கு. 8) 295 - 6. மதுரைக். 363, குறிப்புரை. 300 - 301. "மொய்த்த முட்டன துடற்றலை துளைப்ப முடுகிக், கைத்தலத்தனிமி ரக்கடிது கன்றிவிசிறும், மெய்த்த மெய்ப்பெரிய கேழலென " (கம்ப. விராதன். 33) ; " மெய்யுருவிய வையுறு முனைமுள்ளை, யெய்யுதறின " (சீகாளத்தி. கண்ணப்ப. 86) 303 - 4. " காஞ்சி பாடி .........காக்கம் வம்மோ காதலந் தோழி, ...........நெடுந்தகை புண்ணே " (புறநா. 281 : 5 - 9) ; " கொய்யாக் குறிஞ்சி பலபாடி - மொய்யிணர்ப், பூப்பெய் தெரிய னெடுந்தகை புண் யாங்காப்ப " (பு. வெ. 79)
|