585
305 றலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை
மலைமா ரிடூஉ மேமப் பூசல்
கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்குவரம் பாகிய கணவ னோம்பலி
னொண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு
310நெடுவரை யியம்பு மிடியுமிழ் தழங்குகுரல்
கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
யருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு
முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை யுற்ற களையாப் பூசல்
315கலைகை யற்ற காண்பி னெடுவரை
நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப்


 305. தலைநாட் பூத்த வேங்கை : " தலைநாட் செருந்தி " (சிறுபாண். 147)

305 - 6. மதுரைக். 296 - 7, குறிப்புரை.

307. கயந்தலை மடப்பிடி : நற். 137 : 6.

கயந்தலை மடப்பிடி : இது , கயவென்பது மென்மையையுணர்த்து மென்பதற்கு மேற்கோள் ; தொல். உரி. சூ. 24, இளம். சே. ந.

311. கருவிரன் மந்தி : " கருவிரண் மந்திச் செம்முகப் பெருங்கிளை " (நற். 334 : 1) ; " கருவிரற் கடுவன் " (புறநா. 200 : 2) ; " கருவிரற் செம்முக வெண்பற்சூன் மந்தி " (திணைமாலை. 10)

311 - 2. " காமர் மந்தி, கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி " (குறுந். 69 : 2 - 3) ; " கருவிரன் மந்திக் கல்லா வன்பறழ் ", " கருவிரன் மந்திக் கல்லா வன்பார்ப்பு " (ஐங். 272 : 1, 280 : 1)

313. முறிமேயாக்கைக்கிளை : " முறிமேய் கடுவன் " (ஐங். 276 : 1) 

முறி : தொல். மரபு. சூ. 87, பேர். மேற்.

313 - 4. பொருளானந்தத்திற்கு இவ்வடிகளை மேற்கோள் காட்டினர் ; யா- வி. ஒழிபு. சூ. 3.

311 - 4. " மந்திகண் மறலி யெதிரெதி ருகள மருங்கிருந் துலாவிய கல்லாப், பைந்தலைப் பார்ப்பு மெழுந்துதாய்ப் பிழைத்துப் படரரு விடரினுக் கழுங்குஞ், சந்தனங் கமழுஞ் சாரல் " (காஞ்சிப். இருபத்தெண். 26)

315. முருகு 42 - 3, குறிப்புரை.

316. (பி-ம்.) ' நிலை புணர்ந்திட்ட '

315 - 6. " மால்புடை நெடுவரைக் கோடு "(புறநா. 105 : 6)