| காந்தட் டுடுப்பிற் கமழ்மட லோச்சி வண்கோட் பலவின் சுளைவிளை தீம்பழ முண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார் கன்றுகடாஅ வுறுக்கு மகாஅ ரோதை | 340 | மழைகண்டன்ன வாலைதொறு ஞெரேரெனக் கழைகண் ணுடைக்குங்கரும்பி னேத்தமுந் தினைகுறு மகளி ரிசைபடு வள்ளையுஞ் சேம்பு மஞ்சளு மோம்பினர் காப்போர் பன்றிப் பறையுங் குன்றகச் சிலம்பு | 345 | மென்றிவ் வனைத்து மியைந்தொருங் கீண்டி யவலவு மிசையவுந் துவன்றிப் பலவுட னலகைத் தவிர்த்த வெண்ணருந் திறத்த மலைபடு கடாஅ மாதிரத் தியம்பக் குரூஉக்கட் பிணையற் கோதை மகளிர் | 350 | முழவுத்துயி லறியா வியலு ளாங்கண் விழவி னற்றவன் வியன்கண் வெற்பே கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டு |
336. காந்தட்டுடுப்பு : பட். 153 ; கலித். 59 :3 - 4, 101 : 3 - 4 ; அகநா. 78 : 8 - 9, 108 : 15 ; பெருங். 2. 15 : 73 - 4. 337.கோள் கொத்தினையுணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தஞ்சை 85, உரை. 340. (பி-ம்.) ' ஞெரோவென', ' ஞேயென' " பூங்கரும் புடைந்த தீஞ்சா றடுபுகை புயலென் றெண்ணி " (நைடதம், நாடு.16) ; " சுற்று பாகடு புகையவை சூழ்கரு முகிற்குல மொப்பன " (சீகாளத்தி. நக்கீர. 14) 340 - 41.பெரும்பாண். 259 - 60, குறிப்புரை. 342." பாவடி யுரல பகுவாய் வள்ளை " (குறுந். 89 : 1) ;" வெதிர்நெற் குறுவாநாம், வள்ளை யகவுவம்வா " (கலித். 42 : 7 - 8) 350. மதுரைக். 327 ; " முழவங் கண்டுயி லாத முதுநகர்" (சீவக. 856) 352.இவ்வடி, ஒற்று அளபெடுத்துச் சீர்நிலை யெய்தியதற்கும் (தொல். மொழி. சூ. 7, ந ; ஷ. செய். சூ. 17, இளம் ; ஷ. ஷ.சூ. 18, பேர்) ; அளபெடை வண்ணத்திற்கும் (தொல்.செய். சூ.220 பேர். ந .; யா - கா. ஒழிபு. 8,உரை) , ஒற்று அளபெழுந்து நேரசை யானதற்கும் ( யா - வி. எழுத்து . சூ.3), ஒற்று அளபெழுந்து ஓரலகு
|