588
முண்டற் கினிய பலபா ராட்டியு
மின்னும் வருவ தாக நமக்கெனத்
355தொன்முறை மரபினி ராகிப் பன்மாண்
செருமிக்குப் புகலுந் திருவார் மார்ப
னுருமுரறு கருவிய பெருமலை பிற்பட
விறும்பூது கஞலிய வின்குரல் விறலியர்
நறுங்கா ரடுக்கத்துக் குறிஞ்சி பாடிக்
360கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின்
மைபடு மாமலைப் பனுவலிற் பொங்கிக்
கைதோய் வன்ன கார்மழைத் தொழுதி
தூஉ யன்ன துவலை துவற்றலிற்
றேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடு

பெற்றதற்கும் (யா.கா. ஒழிபு. 1, உரை) ஒற்றள பெடைக்கும் (நன். சூ. 91, மயிலை ; இ - வி. சூ. 20) மேற்கோள்.

" கண்ண்........கேட்டும் ' என்புழிக் கண்ண் என்பது சீர்நிலை யெய்தித் தேமாவாயிற்று, 'தண்ண்ணென ' என்றவழித் தட்பத்திற் சிறப்புக் கூறுதற்காக இயற்சீர்க்கண் ணகரவொற்றினை மிகக்கொடுத்து அளபெடுத்துச் செய்யுள் செய்தான்.அது , மாசெல்சுரமென்னும் வஞ்சியுரிச்சீராவதனை யாகற்க ; பாதிரியென முன்னின்ற இயற்சீரேயாகவென வழுவமைத்தவாறு " (தொல். செய். சூ. 18, .)

354. பரி. 11 : 139, 13 : 64 ,14 : 31 . 21 : 69.

356.(பி-ம்.) ' திருவார் மார்பின் '

357.(பி-ம்.)' பின்பட '

" உருமுரறு கருவிய பெருமழை தலைஇ " (அகநா. 158 :1)

359. இன்குரல் விறலியர் : மலைபடு. 536

359. முருகு. 239.

358 - 60." செறிதொடி விறலியர் கைதொழுஉப் பழிச்ச, வறிது நெறியொரீஇ வலஞ்செயாக் கழிமின் " (மலைபடு. 201 - 2)

361 - 2. " எழிலி, யெஃகுறு பஞ்சிற் றாகி..............நெடுவரை ஆடும் " , " பனுவல் போலக் கணங்கொள, வாடுமழை தவழுங் கோடுயர் நெடுவரை " (நற் . 247 : 3 - 5, 353 : 2 - 3) ; " பொங்க லாடி, விண்டுச் சேர்ந்த வெண்மழை பொங்கலாடி யென்றது எஃகின பஞ்சுபோலப் பொங்கியெழுதலைச் செய்தென்றவாறு " (பதிற். 55 : 14 - 5, உரை) ; " வில்லெறி பஞ்சியின் வெண்மழை தவழும் " ,"பொங்கல் வெண்மழை, யெஃகுறு பஞ்சித் துய்ப்பட் டன்ன, துவலை " (அகநா. 133 : 6. 217 : 1 - 3)

362 - 4." தாழ்நீர் நனந்தலை யழுந்துபடப் பாஅய் ............செறிந்