589
365 காஅய்க் கொண்டநும் மியந்தொய் படாமற்
கூவ லன்ன விடரகம் புகுமி
னிருங்க லிகுப்பத் திறுவரை சேராது
குன்றிடம் பட்ட வாரிட ரழுவத்து
நின்று நோக்கினுங் கண்வாள் வௌவு
370 மண்கனை முழவின் றலைக்கோல் கொண்டு
தண்டுகா லாகத் தளர்த லோம்பி
யூன்றினிர் கழிமி னூறுதவப் பலவே
யயில்காய்ந் தன்ன கூர்ங்கற் பாறை
வெயில்புறந் தரூஉ மின்ன லியக்கத்துக்
375கதிர்சினந் தணிந்த வமயத்துக் கழிமி
னுரைசெல வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடு
புரைதவ வுயரிய மழைமருள் பஃறோ

தவிம் மழக்கே ", " முழங்குகடன் முகந்த கமஞ்சூன் மாமழை , மாதிர நனந்தலை புதையப் பாஅய் " (நற். 115 : 7 - 9, 347 : 1 - 2 ) ; " பெயல்கான் மறைத்தலின் விசும்புகா ணலரே, நீர்பரந் தொழுகலினிலங்கா ணலரே " , " விசும்புகண் புதையப் பாஅய்................பெயலா னாதே வானம் " (குறுந். 355 : 1 - 2, 380 : 1 - 3) ; " மாநிலந் தோன்றாமை மலிபெய றலைஇ " (பரி. தி. 2 )

365. மலைபடு. 13.

373.(பி-ம்.) ' கூன்கட்பாறை'

சிறுபாண். 7 - 8, அடிக் ; " வேலைக் காய்ச்சிமுன் னட்டுவைத்தன்ன வெம்பரல் " (திருவையாற்றுப் புராணம், 9 : 14)

374.இன்னலென்பது இன்னாமையென்னும் குறிப்புணர்த்துதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ.6, இளம். சே. தெய்வச். ந.

375.கதிர் சினந்தணிந்தவமயம் : " சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேர " (நற். 369 : 1, குறுந். 195 : 1 ) ; " கதிர்சினந் தணிந்த கையறு மாலை " (குறுந். 387 : 2)

376." உரைசெல வெறுத்தவவன் மூதூர் மாலையும் " (மலைபடு. 93)

377.மழைமருள்பஃறோல் : " மன்ன, ரெயிலூர் பஃறோல் போலச், சென்மழை " (நற். 197 : 10 - 12) ; " மழையென மருளு மாயிரும் பஃறோல் " (பதிற். 62 : 2) ; " மழைத்தோற் பழையன் " (அகநா. 186 : 15) ; " மழையுருவின தோல் " , " மழையென மருளும் பஃறோல் " (புறநா. 16 : 2, 17 : 34)