590
லரசுநிலை தளர்க்கு மருப்பமு முடைய 
பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறு
380முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கோ
லின்னிசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி 
மண்ணார் முழவின் கண்ணு மோம்பிக்
கைபிணி விடாஅது பைபயக் கழிமின்
களிறுமலைந் தன்ன கண்கூடு துறுகற்
385றளிபொழி கானந் தலைதவப் பலவே
யொன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட
கல்லேசு கவலை யெண்ணுமிகப் பலவே

382. (பி-ம்.) ' முழவுங்கண்ணு மோம்பி '

384. துறுகல்லிற்கு யானை உவமை : பட்டினப் . 234, குறிப்புரை ; " வேழ, மிரும்பிணர்த் துறுகல் பிடிசெத்துத் தழூஉம் " (ஐங். 239 :1 - 2)

386.ஒன்னாத் தெவ்வர் : மலைபடு. 397 ; பெரும்பாண். 491.

பகைவர் தோல்விகண்டு ஆர்த்தல் : பெரும்பாண். 419 ; " வினைவலதிகன், களிறொடு பட்ட ஞான்றை, யொளிறுவாட் கொங்க ரார்ப்பினும் பெரிதே " (குறுந். 393 : 4 - 6) ; " கொன்றுகளம் வேட்ட ஞான்றை , வென்றிகொள் வீர ரார்ப்பினும் பெரிதே " , " எழுவுறழ் திணிதோ ளியறேர்ச் செழிய, னேரா வெழுவ ரடிப்படக் கடந்த , வாலங்கானத் தார்ப்பினும் பெரிதென " , " மொய்வலி யறுத்த ஞான்றைத், தொய்யா வழுந்தூ ரார்ப்பினும் பெரிதே " (அகநா. 36 : 22 - 3, 209 : 4 - 6, 246 : 13 - 4) ; " உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை ................அழுந்தப் பற்றிய யகல்விசும் பார்ப்பெழக், கவிழ்ந்துநிலஞ் சேர வட்டதை " (புறநா. 77 : 9 - 12)

388. செல்லாநல்லிசை : மலைபடு 70, அடிக் ; புறநா. 395 : 19.

387 - 9.நடுகல் : " விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோ, ரெழுத்துடை நடுகல் " (ஐங். 352 : 1 - 2) ; " விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோ, ரெழுத்துடை நடுக லன்னிழல் வதியும், அருஞ்சுரக் கவலை " , " நல்லமர்க் கடந்த நாணுடை மறவர், பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் ", " ஆடவர், பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் " , " விடுவாய்ச் செங்கணைக் கொடுவி லாடவர், நன்னிலை குறித்த கன்னிலை யதர " ," நல்லிசை நிறுத்த நாணுடை மறவர், நிரைநிலை நடு