591
390 யின்புறு முரற்கைநும் பாட்டுவிருப் பாகத்
தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்துத் துனைமின்
பண்டுநற் கறியாப் புலம்பெயர் புதுவிர்
சந்து நீவிப் புன்முடிந் திடுமின்
செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார்
395கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த
கடவு ளோங்கிய காடேசு கவலை
யொட்டா தகன்ற வொன்னாத் தெவ்வர்
சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவே
தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை
400யோம்பா வள்ளற் படர்ந்திகு மெனினே

கல் " (அகநா. 53 : 10 - 12, 67 : 8 - 10, 131 : 9 - 11, 179 : 7 - 8, 387 : 14 - 5) ; " கெடுவி னல்லிசை சூடி, நடுகல் லாயினன் புரவலனெனவே " , " அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித், தினிநட்டனரே கல்லும் " (புறநா. 221 : 12 - 3, 264 : 3 - 4) ; " சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த, நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப் - போர்க்களத்து, மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக், கன்னட்டார் கல்சூழ் கடத்து " , " கோள்வாய்த்த சீயம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து, வாய்வாய்த்து வீழ்ந்த மறவேலோய் - நாள்வாய்த், திடைகொள லின்றி யெழுத்துடைக் கல்வாய்,மடைகொளல் வேண்டு மகிழ்ந்து " (தொல். புறத். சூ. 5, ந. மேற்.) ;" மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப், பீலி யணிந்து பெயர்பொறித்து - வேலமரு, ளாண்டக நின்றி வமர்வெய்யோற் காகென்று, காண்டக நாட்டினார் கல் " (பு. வெ. 251) ; " பட்டோர் பெயரு மாற்றலு மெழுதி, நட்ட கல்லும் " (திருவாரூர் - மும் 16 : 1 - 2) 

390.முரற்கை : " பாணர் நரம்புளர் முரற்கை போல ", " பாணர் நரம்புளர் முரற்கையின் யாத்தபயன் " (ஐங். 402: 2 - 3, 407 : 1 - 2)

395 - 6. மராஅத்த கடவுள் : " மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் " (குறுந். 87 : 1) ; " தொல்வலி மராஅமு, முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் " (கலித். 101 : 13 - 4) 

397.ஒன்னாத்தெவ்வர் : மலைபடு. 386, குறிப்புரை.

398." எரிசுடர்க் கடவுளுங் கருதின்வே முள்ளமும் ", " நினையு நெஞ்சமுஞ் சுடுவதோர் நெடுஞ்சுரம் " (கம்ப. தாடகை. 5, வனம்புகு. 38) 

399.தேர்வீசுகவிகை : மதுரைக். 224, குறிப்புரை.

400." கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினே " (மலைபடு. 424)