| மேம்பட வெறுத்தவவன் றொஃறிணை மூதூ ராங்கன மற்றே நம்ம னோர்க்கே யசைவுழி யசைஇ யஞ்சாது கழிமின் புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக் | 405 | கலைநின்று விளிக்குங் கானமூ ழிறந்து சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை தலையிறும்பு கதழு நாறுகொடிப் புறவின் வேறுபுலம் படர்ந்த வேறுடை யினத்த வளையான் றீம்பான் மிளைசூழ் கோவலர் | 410 | வளையோ ருவப்பத் தருவனர் சொரிதலிற் பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும் புலம்புசே ணகலப் புதுவி ராகுவிர் பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக் | 415 | கல்லென் கடத்திடைக் கடலி னிரைக்கும் பல்யாட் டினநிரை யெல்லினிர் புகினே பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவிர் துய்ம்மயி ரடக்கிய சேக்கை யன்ன மெய்யுரித் தியற்றிய மிதியதட் பள்ளித் | 420 | தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின் கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் கூவை காணிற் படியோர்த் தேய்த்த பணிவி லாண்மைக் |
ஓம்பாவள்ளல் : மதுரைக். 146, குறிப்புரை. 403.அசைவுழி யசைஇ : பெரும்பாண். 44. 406.மரைவிடை : " மரையான் கதழ்விடை " (மலைபடு. 331) 408 - 9.ஏறுடையினத்த ஆன் : " கறங்குமணி துவைக்கு மேறுடைப் பெருநிரை " (மலைபடு. 573) ; நெடுநல். 4 , குறிப்புரை. 414.துருவையும் வெள்ளையும் : " கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும் " (பெரும்பாண். 153) 417.(பி-ம்.) ' விதவையும் ' 421 - 2." கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் " (புறநா. 23 : 5 ) 423." படியோர்த் தேய்த்த வாண்மை " (பதிற். 79 : 6) ; " படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை " (அகநா. 22 : 5 )
|