593
கொடியோள் கணவற் படர்ந்திரு மெனினே 
425தடியுங் கிழங்குந் தண்டினர் தரீஇ
யோம்புந ரல்ல துடற்றுந ரில்லை
யாங்குவியங் கொண்மி னதுவதன் பண்பே
தேம்பட மலர்ந்த மராஅ மெல்லிணரு
மும்ப லகைத்த வொண்முறி யாவுந்
430தளிரொடு மிடைந்த காமரு கண்ணி
திரங்குமர னாரிற் பொலியச் சூடி
முரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென
வுண்டனி ராடிக் கொண்டனிர் கழிமின்
செவ்வீ வேங்கைப் பூவி னன்ன
435 வேய்கொ ளரிசி மிதவை சொரிந்த
சுவல்விளை நெல்லி னவரையம் புளிங்கூ
ழற்கிடை யுழந்தநும் வருத்தம் வீட 
வகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய 
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்

 424. மலைபடு. 400.

கொடியோள் கணவன் : (மலைபடு. 58, குறிப்புரை.)

425." பராஅரை வேவை பருகெனத் தண்டி " (பொருந. 104)

429.யானை யாவை முறித்தல் : " பெருங்கை வேழ, மென்சினை யாஅம் பிளக்கும் ", " உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய, யாஅவரிநிழல் " , " அத்த யாஅத்துப், பொரியரை முழுமுத லுருவக் குத்தி ...........தடமருப்பி யானை ", " களிறு.............நிலையுயர் யாஅத் துலையத் குத்தி " (குறுந். 37 : 2 - 3, 232 : 4 - 5, 307: 4 - 6) " நெடுநிலை யாஅ மொற்றி நனைகவுட் படிஞிமிறு கடியுங் களிறே " , " யானைதன், கொன்மருப் பொடியக் குத்திச் சினஞ்சிறந், தின்னா வேனி லின்றுணை யார, முளிசினை யாஅத்துப் பொளிபிளந் தூட்ட " (அகநா. 59 : 8 - 9. 335 : 4 - 7)

430 - 31" மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணி " (புறநா. 264 : 2)

திரங்குமரல் : அகநா. 49 : 12, 199 : 7, 327 : 10; சிலப். 11 : 77

435.(பி-ம்.) ' விதவை '

435 - 6." ஆய்மக ளட்ட வம்புளி மிதவை " (புறநா. 215 : 4)

434 - 5. பெரும்பாண். 194 - 5.