440 | பென்னறைந் தன்ன நுண்ணே ரரிசி வெண்ணெறிந் தியற்றிய மாக்க ணமலை தண்ணெ னுண்ணிழு துள்ளீ டாக வசையினிர் சேப்பி னல்கலும் பெறுகுவிர் விசையங் கொழித்த பூழி யன்ன | 445 | வுண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப் பனிசே ணீங்க வினிதுடன் றுஞ்சிப் புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின் புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின் | 450 | மெல்லவ லிருந்த வூர்தொறு நல்லியாழ்ப் பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும் பன்னா ணிற்பினுஞ் சேந்தனிர் செலினு நன்பல வுடைத்தவன் றண்பணை நாடே கண்புமலி பழனங் கமழத் துழைஇ | 455 | வலையோர் தந்த விருஞ்சுவல் வாளை நிலையோ ரிட்ட நெடுநாண் டூண்டிற் பிடிக்கை யன்ன செங்கண் வராஅற் றுடிக்க ணன்ன குறையொடு விரைஇப் பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர் |
441.(பி-ம்.) ' எள்ளெறிந்து ' ‘ எண்ணெறிந்தது ' 442.நுண்ணிழுது : " நீரினு நுண்ணிது நெய்யென்பர் " (நாலடி. 282) 445.(பி-ம்.) ' இடிநுண்ணுவணை ' உண்ணுநர்த்தடுத்த நுண்ணிடி நுவணை : மலைபடு. 138, குறிப்புரை. 448. மலைபடு. 65 - 6, குறிப்புரை. 451." பண்ணுப் பெயர்த்தாங்கு " (பதிற். 65 : 15) 452.(பி-ம்.) 'சேர்ந்தனிர் ' " பலநாட் பயின்று பலரொடு செல்லினும் " (புறநா. 101 : 2) 454.(பி-ம்.) ' சண்புமலிபழனம் ', 'காண்புமலி ', 'கண்பமல் ' கண்பு :மதுரைக். 172, குறிப்புரை. கண்புமலி பழனம் : " கழனிக் கண்பு " (பெருங். 2 . 19 : 187) 457 - 8.வராற்றுடிக்கணன்னகுறை : " கொழுமீன் குறைஇய துடிக்கட்டுணியல்(மதுரைக். 320) என்பதன் குறிப்புரையைப் பார்க்க. 459. பகன்றைக்கண்ணி : (ஐங். 87 : 1 ; பதிற். 76 : 12)
|