596
னிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற்
பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ
480வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்
தியாறெனக் கிடந்த தெருவிற் சாறென
விகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்
கடலெனக் காரென வொலிக்குஞ் சும்மையொடு
மலையென மழையென மாட மோங்கித்
485துனிதீர் காதலி னினிதமர்ந் துறையும்
பனிவார் காவிற் பல்வண் டிமிரு
நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்
பொருந்தாத் தெவ்வ ரிருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கு மொள்வாண் மறவர்
490கருங்கடை யெஃகஞ் சாத்திய புதவி 
னருங்கடி வாயி லயிராது புகுமின்
மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்
வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி

478. மு. அகநா. 378 : 1

மலைபடு. 575 ; " துஞ்சுநீ ணிதியது சுரமை " (சூளா. நாடு. 1)

வடசொல் சிதைந்து வந்ததற்கு இவ்வடி மேற்கோள் ; (தொல். எச்ச. சூ. 6, இளம் ; இ - வி. சூ. 635)

479. (பி-ம்.) ' பதியெழவறியா ', 'பதியெழுவறியா '.

" பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய "," பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட, மதுரை மூதூர் "(சிலப். 1:15, 15:5 - 6)

481. (பி-ம்.)'யாறு கிடந்த'

தெருவுக்கு யாறு : (மதுரைக்.359,கு- ரை.)

483. " கவ்வையுங் கடும்புன லொலியுங் காப்பவர், செவ்வனூறாயிரஞ் சிலைக்கும் பம்பையு, மெவ்வெலாத் திசைகளு மீண்டிக் காரொடு, பவ்வநின் றியம்புவ தொத்த வென்பவே " (சீவக. 42)

484. மாடத்திற்கு மலை : (மதுரைக். 474, 488, 501 - 2)

மழை மாடத்திற்கு : (பொருந. 84)

491. மலைபடு. 165, அடிக்; " தடைஇய வாயி றடையாது நுழைந்து " (தணிகையாறு. 231)

492." வயிரிய மாக்கள்............மன்றநண்ணி " (பதிற். 29:8-9); " மன்றுபடு பரிசிலர் " (புறநா.135:11)

493. (பி-ம்.) ' சேஎய் பெருவிறல் '