597
வந்தோர் மன்ற வளியர் தாமெனக்
495கண்டோ ரெல்லா மமர்ந்தினிதி னோக்கி
விருந்திறை யவரவ ரெதிர்கொளக் குறுகிப்
பரிபுலம் பலைத்தநும் வருத்தம்வீட
வெரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத்
தொழுதி போக வலிந்தகப் பட்ட
500 மடநடை யாமான் கயமுனிக் குழவி
யூமை யெண்கின் குடாவடிக் குருளை
மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள்
வரைவாழ் வருடை வன்றலை மாத்தக
ரரவுக்குறும் பெறிந்தசிறுகட் டீர்வை
505யளைச்செறி யுழுவை கோளுற வெறுத்த
மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி
யரக்குவிரித் தன்ன செந்நில மருங்கிற்
பரற்றவ ழுடும்பின் கொடுந்தா ளேற்றை
வரைப்பொலிந் தியலு மடக்கண் மஞ்ஞை
510கானக் கோழிக் கவர்குரற் சேவல்
கானப் பலவின் முழவுமருள் பெரும்பழ
மிடிக்கலப் பன்ன நறுவடி மாவின்
வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரந்
தூவற் கலித்த விவர்நனை வளர்கொடி

 493 - 4. முருகு. 284- 5.

492 - 4. " தன்றெறல் வாழ்க்கை " என்பதன் விசேடவுரைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; (சிலப். 15 : 195 , அடியார்)

497." பரிபுலம் பினரென " (சிலப். 10 : 226) ; " பரிபுலம் பினனிவன் " (மணி. 16 : 57)

498. (பி-ம்.) ' மராஅத்த'

498-500. குறுந். 322 : 1-5.

502-3. வருடை : பட்டினப். 139, குறிப்புரை.

505 - 6. குறுந். 321: 5-6

507. பொருந். 43, குறிப்புரை.

510. மு. குறுந்.242 : 1.

500-510. இங்கே கூறப்பட்ட விலங்கினங்களிற்சில சிலப்பதிகாரம், 25 : 48- ஆம் அடி முதலியவற்றிற் கூறப்பட்டுள்ளன.

511. மலைபடு. 143-4.

512. நறுவடிமா : (பெரும்பாண். 309 ; நற்.243 : 3 ; குறுந். 331 : 5-6 ; ஐங். 61 : 1, 213 : 1 ; கலித். 41 : 14, 84 : 1 - 2)