599
கானிலை யெருமை கழைபெய் தீந்தயிர்
நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை
525 நேமியிற் செல்லு நெய்க்க ணிறாஅ
லுடம்புணர்பு தழீஇய வாசினி யனைத்துங்
குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி
கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப
நோனாச் செருவி னெடுங்கடைத் துவன்றி
530வானத் தன்ன வளமலி யானைத்
தாதெருத் ததைந்த முற்ற முன்னி
மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்பக்
கழைவளர் தூம்பின் கண்ணிட மிமிர
மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்
535நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக்

525. மலைபடு. 238 - 9, குறிப்புரை.

524 - 5. நெடுவரை.........இறால் : (முருகு. 299 - 300)

" அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து, திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே" (புறநா. 109 : 7 - 8)

527. " குடாஅது, பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பப்., பூவிரி. புதுநீர்க் காவிரி புரக்கும் " (புறநா. 166 : 26 - 8)

527 - 8." மலைத்தலைய கடற்காவிரி " (பட். 6) ; " குடமலைப் பிறந்த கொழும்பஃ றாரமொடு, கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்குங், காவிரி " (சிலப். 10 : 106 - 8)

526 - 9. மதுரைக். 695 - 7.

530. மலைபடு. 377 ; " காள மேகமு நாகமுந் தெரிகில " (கம்ப. சித்திரகூட. 2)

531. தாதெருத் ததைந்த முற்றம் : "மன்றத், தெருவினுண்டாது குடைவன வாடி" (குறுந். 46 : 3 - 4) ; "தாதெரு மன்றம்" (கலித். 103 : 62, 108 : 60 ; சிலப். 16 : 102, 17 : "மாயவன்றம்", 27 : 74) ; "தாதெரு மறுகு" (நற். 343 : 3 ; அகநா. 165 : 4 ; புறநா. 33 : 11, 215 : 2, 311 : 3)

532. மலைபடு. 1 - 3, குறிப்புரை.

533. மலைபடு. 6, குறிப்புரை.

534. மருதம்பண்ணிய : (மலைபடு. 469- 70, குறிப்புரை.)

கருங்கோட்டுச் சீறியாழ் : (நெடுநல். 70, குறிப்புரை.)