60

பத்துப்பாட்டு

175-6. [ சின்னாள், ஆவினன்குடி யசைதலு முரியன்:] ஆவினன்குடி சின்னாள் அசைதலும் உரியன் - ஆவினன்குடி யென்னும் ஊரிலே சிலநாள் இருந்தலுமுரியன்;

பலர்புகழ் மூவரும் தலைவராகவேண்டி (162) அதற்குக் குறை பாடுண்டாக்கின நான்முகவொருவனைக் கருதி (165) ஒன்றுபுரிகொள்கைப் (161) புள்ளணி நீள்கொடிச் செல்வனும் (151) முரண்மிகு செல்வனும் (154) யானையெருத்தமேறிய செல்வனும் (159) முப்பத்துமூவரும் (167) பதினெண்கணங்களும் (168) தோன்றலர் (169) செலவினர் (170) திறலினர் (171) குரலினர் (172) கொட்பினராய் உடன்வந்து (174) தம் (173) விழுமிய (172) பெறுமுறை குறையுறுமருங்கின் முடித்துக் கோடற்கு (173) மென்மொழி மேவலர் இன்னரம்புளர (142) முனிவர் (137) மேவர (136) முற்புகக் (137) காணத் (174) தான் ஆவினன் குடியிலே காண்வர (165) அசைதலு முரியனென முடிக்க.

கந்தருவர் பாட்டால் (141 - 2) முனிவு தீர்ப்பார்.

முனிவர் தம்மை மறாமைபற்றி முன்னேசென்றார்.

இனிச் சித்தன்வாழ்வென்று சொல்லுகின்றவூர் முற்காலத்து ஆவினன்குடி யென்று பெயர்பெற்றதென்றுமாம். அது, "நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ், வில்லந் தொருமூன் றெரியுடைத்து - நல்லரவப், பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின், னாட்டுடைத்து நல்ல தமிழ்" என்று ஒளவையார் கூறியதனாலுணர்க; 1சித்த னென்பதுபிள்ளையாரக்குத் திருநாமம்.

அதாஅன்று - அதுவன்றி.

திருவேரகம்

177. இரு மூன்று எய்திய 2இயல்பினின் வழாஅது - ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றலென்னும் ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல்,

வழாது, வழாமல் வழுவாமலெனத் திரிக்க.

178. இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி - தாயும் தந்தையுமாகிய இருவர் குலத்தையும் உலகத்தார் நன்றென்று மதித்த பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த இருபிறப்பாளர் (182),

குடி - 3குண்டினர், காசிபர் என்றாற்போல்வன.


1.இது முருகக்கடவுள் ஆயிரநாமத்துள்ஒன்று.

2. இயல்பினின் - ஒழுக்கத்தினின்; அது வைதீக ஆசாரம் (வேறுரை)

3.(பி-ம்.) ‘குண்டலர்'