| நெடுவரை யிழிதரு நீத்தஞ்சா லருவிக் | 555 | கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று வடுவா ழெக்கர் மணலினும் பலரே அதனால், புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப் பரந்திடங் கொடுக்கும் விசும்புதோ யுள்ளமொடு நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரி | 560 | துவந்த வுள்ளமோ டமர்ந்தினிது நோக்கி யிழைமருங் கறியா நுழைநூற் கலிங்க மெள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ முடுவ றந்த பைந்நிணத் தடியொடு நெடுவெ ணெல்லி னரிசிமுட்டாது | 565 | தலைநா ளன்ன புகலொடு வழிசிறந்து பலநா ணிற்பினும் பெறுகுவிர் நில்லாது செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென மெல்லெனக் கூறி விடுப்பி னும்முட் டலைவன் றாமரை மலைய விறலியர் | 570 | சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய |
555. கட்கின் சேயாறு : (மலைபடு. 476) 556. மதுரைக். 236, குறிப்புரை. சிலப். 28 : 125 - 6. 559 - 60. "யாந்தன் னறியுந மாகத் தான்பெரி, தன்புடை மையினெம்பிரி வஞ்சி" (புறநா. 381 : 6 - 7) 561. பொருந. 82 - 3, குறிப்புரை. 563. மலைபடு. 177. 566. குறிஞ்சிப். 238, குறிப்புரை ; "தலைநாள் விழைவொடு" (வி - பா. குருகுல. 79) 565 - 6."பலநாள் பயின்று பலரொடு செல்லினுந், தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ" (புறநா. 101 : 2 - 3"பன்னாளுஞ் சென்றக்காற் பண்பிலார் தம்முழை, யென்னானும் வேண்டுப வென்றி கழ்ப - வென்னானும், வேண்டினு நன்றுமற் றென்று விழுமியோர், காண் டொறுஞ் செய்வர் சிறப்பு" (நாலடி. 159) 567 - 8. பொருந. 121 - 2. 569. பாணன் பொற்றாமரை சூடுதல் : (பொருந. 159 - 60, குறிப்புரை.) 569 - 70. விறலியர் இழை பெறுதல் : " வசையின் மகளிர் வயங்கிழை யணிய " (பதிற். 12 : 23) பாணன் பொற்றாமரை பெறுதலும் விறலி இழைபெறுதலும் : பொருந. 159 - 62, குறிப்புரை.
|