602
நீரியக் கன்ன நிரைசெல னெடுந்தேர்
வாரிக் கொள்ளா வரைமருள் வேழங்
கறங்குமணி துவைக்கு மேறுடைப் பெருநிரை
பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி
575நிலந்தினக் கிடந்த நிதியமோ டனைத்து
மிலம்படு புலவ ரேற்றகைந் நிறையக்
கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின்

571. செலவுக்கு நீரியக்கம் : மலைபடு. 51 - 3, குறிப்புரை.

572. வரைமருள்வேழம் : " வரைமருளு முயர்தோன்றல...............யானை " (மதுரைக். 46 - 7) ; " மலையெனத், தேனிறை கொள்ளு மிரும்பல் யானை " (புறநா. 17 : 34 - 5) ; " மஞ்சிவர் குன்றென மலைந்த வேழமே " (சீவக. 2230) ; " மலையே மலையோடு மலைந்தனபோற், கொலைவேழமொ டேற்றன குஞ்சரமே " (சூளா. அரசியல் . 184); " யானை மலையென மலைவ " (கம்ப. மிதிலை 3)

573. ஏறுடைப் பெருநிரை : மலைபடு. 408 - 9 ; நெடுநல். 4, குறிப்புரை.

574. "பொலம்படைக் கலிமா","பொலம்படையமா" (புறநா. 116 : 19, 359 : 14 ) ;"புனையும் பொலம்படைப் பொங்குளைமான" (பு. வெ. 276)

பொன்னென்பது பொலமெனத் திரிந்து வந்ததற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். புள்ளி. சூ. 61, இளம். ந.

575. மலைபடு. 478 : மதுரைக். 215, குறிப்புரை. "நிலந்தினக் கிடந்த நெடுநிதிச் செல்வம்" (தணிகையாறு. 25)

576. ஏற்றகை : நாலடி. 98.

"இலம்படு................நிறையவென வரும் ; உரிச்சொல்லாகலான் உருபு விரியாதெனினும் இலத்தாற் பற்றப்படும் புலவரென்னும் பொருளுணர நிற்றலின் வேற்றுமை முடிபாயிற்று" (தொல். புள்ளி. சூ. 21,இளம்.)" ' இலம்...............நிறைய' இதற்கு இல்லாமையுண்டாகின்ற புலவரெனப் பொருள் கூறுக " ( ந.) ; இலம்பாடு வறுமையை யுணர்த்துமென்பதற்கு மேற்கோள் ; தொல். உரி. சூ. 62, இளம். சே. தெய்வச். ந.

576 - 7. "இலம்படு புலவ ரேற்றகை ஞெமரப், பொலஞ்சொரி வழுதி" (பரி. 10 : 126 - 7)

571 - 7. பரிசிலர்க்குத்தேர் தருதல் : மலைபடு. 399 - 400 ; சிறு பாண். 142 - 3, குறிப்புரை ; மதுரைக். 224, கு -ரை.