கமழ் ஐம்பால் - 1 இயல்பானமணத்தையுடைய ஐம்பால். 31 - 2. [ மாண்ட நுடங்கெழி லாகத்,தடங்குமயி ரொழுகிய வவ்வாய் கடுப்ப :] எழில் நுடங்குமடந்தை மாண்ட ஆகத்து அடங்கு மயிர் ஒழுகிய அ வாய்கடுப்ப - 2அழகு கட்புலனாகி நின்றசையும் மடந்தையதுமாட்சிமைப்பட்ட மார்பிடத்தே சென்று பின்பு இல்லையானமயிர் ஒழுங்குபட்டுக் கிடக்கின்ற அழகிய வயிற்றிடத்தையொக்க, 33 - 4. அகடு சேர்பு பொருந்தி அளவினில்திரியாது கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி -பொல்லம்பொத்துதல் நடுவே சேரப் பட்டுக் கட்குஇனிதாய்த் தனக்குக் கூறுகின்ற அளவிலே வேறுபடாமற்பகுத்தலுண்டாக அகத்திட்ட உயர்ந்து வளைந்த உந்தியினையும், 3 உந்தி - யாழகத்துஓருறுப்பு. 35 - 7. நுணங்கு அரம் நுவறிய நுண் நீர்மாமை களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் வணர்ந்துஏந்து மருப்பின் வள் 4 உயிர் 5பேர்யாழ் - நுண்ணிய அரத்தாலே அராவின நுண்ணிய நீர்மையினையுடையகரியநிறத்தாலே களம்பழத்தின் நிறத்தை ஒத்தனவாய்க் கடுகித் தோன்றுகின்ற நிறத்தையுடைய வளைந்தேந்தினகோட்டினையுமுடைய பெரிய ஓசையினையுடைய பேரியாழ், திவவினையும் (21) நரம்பினையும் (23)பச்சையினையும் (29) உந்தியினையும் (34) மருப்பினையுமுடையபேரியாழ் (37) என்க. 38. [அமைவரப் பண்ணி யருணெறி திரியாது:] பேரியாழ் (37) அருள் நெறி திரியாது அமைவர பண்ணி- பேரியாழைத் தனக்கு நூலினாற் கூறிய வழிகளைத் தப்பாதபடிபொருந்துதல்வரச் சமைத்து, 39 - 40. இசைபெறு திருவின் வேந்துஅவை ஏற்ப துறை பல முற்றிய - இசையை எக்காலமும் கேட்கின்றசெல்வத்தினையுடைய அரசர்
1 இயல்பான மணம் - இயற்கை மணம் ;" செறியெயிற் றரிவை கூந்தலி, னறியவு முளவோநீயறியும் பூவே " (குறுந். 2 : 4 - 5) 2 இவ்வழகு இலாவணிய மெனப்படும். 3 "உந்தி யென்பது, கொப்பூழினையும்,ஆற்றிடைக்குறையினையும், தேர்த்தட்டினையும்யாழ்ப்பத்தற்றுளையினையு முணர்த்தும் " (நன்.சூ. 271, மயிலை.) 4உயிர் - ஒலி ; குறிஞ்சி. 100, ந; " உயிரி லெழுத்து மெண்ணப்படாஅ " (தொல்.செய். சூ. 44) 5பேரியாழ் - இருபத்தொரு நரம்புகளையுடையது; பெருங்கலமெனவும் படும். இதனுடைய இலக்கணம், சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லாருரைப் பாயிரத்தாலறியலாகும்.
|