அரசர்களுடைய அவைக்களத்தே அவர்கள் செவிக்கொள்ளும்படிதாம்வாசிக்கும் 1 துறைகள் பலவற்றையும்வாசித்துமுடித்த, 40. பை தீர் பாணரொடு - 2பசுமையற்ற பாணரோடே, என்றது , கல்வி முதிர்ந்தமையின்இளமையற்ற பாணரென்றவாறு. 41. உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்றுஏறலின் - உயர்ந்து வளர்ந்த கற்கள் தம்மிற்றொடரும்பெரிய மலைகள் வேறோரிடையூறின்றாக ஏறிவருகையினாலே, 42 - 3. [மதந்தபு ஞமலி நாவி னன்ன,துளங்கியன் மெலிந்த கல் பொரு சீறடி :] துளங்கு இயல்மெலிந்த மதம் தபு ஞமலி நாவின் அன்ன கல் பொரு சிறுஅடி - அசைகின்ற இயல்பினான் இளைத்த வலி கெட்ட நாயினதுநாவினையொத்த கல்லுப்பொருகின்ற சிறிய அடியினையும், ஏறலின் மெலிந்த அடியென்க. 44 - 6. [ கணங்கொ டோகையிற்கதுப்பிகுத் தசைஇ, விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்,திலங்குவளை விறலியர் நிற்புறஞ்சுற்ற :] விலங்கு மலைத்து அமர்ந்த சேயரிநாட்டத்து - மானோடு மாறுபட்டுப் பொருந்தின செவ்வரியையுடையகண்ணினையும், இலங்கு வளை விறலியர் -விளங்குகின்ற வளையினையுமுடைய விறல்படப்பாடியாடுவார், கணம் கொள் தோகையின் கதுப்புஇகுத்து அசைஇ நின் புறம் சுற்ற - திரட்சியைக் கொண்டமயில்போலே மயிரைத்தாழ்த்து இளைத்து நின்னைப்புறத்தே சூழ, அடியினையும் (43) நாட்டத்தினையும்(45) வளையினையுமுடைய விறலியர் (46) கதுப்பிகுத்துஅசைஇக் (44) சுற்ற (46) என்க. 47 - 8. [ கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழற்,புனல்கால் கழீஇய மணல்வார் புறவில் :] 3 புனல் கால் கழீஇய மணல்வார் புறவில் - பெருகும்நீர் துராலை வாரிக்கொண்டுபோன மணலொழுங்குபட்ட சிறுகாட்டிடத்தில்,
1துறைபலவென்றது, வலிவு, மெலிவு,சமமென்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றில் ஏழுதானம்முடித்துப்பாடும் இருபத்தொரு பாடற்றுறைகளை ; "மூவேழ்துறையு முறையுளிக் கழிப்பி " (புறநா. 152 : 20) ;"ஏழே யேழே நாலேமூன் றியலிசை யிசையியல்பா வஞ்சத்தேய்வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்" (தே. தாளச்சதி.) 2பசுமை - இளமை ; " பசுங்கதிர் -பச்சைக் கதிர் ; பசுமை நிறத்திற் சென்றதன்று ;இளமையிற் சென்றது " (தக்க. 605, உரை) 3 "புனல்கால் கழீஇய - நீர்பெருகியகாலத்தே ஏறிய இடத்தைத் தூய்தாக்கிப் போன" (பெரும்பாண்.380, ந.)
|