610

கயம் புக்கன்ன பயம் படு தண் நிழல்- குளத்திலே புகுந்தாலொத்த பயனைத்தருகின்றகுளிர்ந்த நிழலிலே,

49 - 50. [புலம்புவிட் டிருந்தபுனிறில் காட்சிக், கலம்பெறு கண்ணுள ரொக்கற்றலைவ :]

புலம்பு விட்டு இருந்த காட்சி கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ - வழிவந்த வருத்தத்தைக்கைவிட்டிருந்த அறிவினையுடைய பேரணிகலங்களைப் பெறுங்கூத்தருடைய சுற்றத்திற்குத் தலைவனே,

புனிறு இல் ஒக்கல் - ஈன்றணிமையில்லாதசுற்றம்,

என்றது, பிள்ளையைப் பெற்றவர்கள்பிள்ளையைக்கொண்டு கூட வந்திலர்களென்றவாறு.

கலப்பையிராய் (13) இயவுக்கொண்டொழுகி(20) யாழைப் (37) பண்ணித் (38) துறைபலமுற்றிய பாணரோடு(40) விறலியர் புறஞ்சுற்றத் (46) தண்ணிழலிலே (47)இருந்த (49) கண்ணுளரொக்கற்றலைவனே (50) என வினைமுடிக்க.

கலப்பையிரென்னும் பன்மைதலைவனென்னுமொருமையொடு முடிந்தது, " ஓருமை சுட்டிய" (தொல். எச்ச. சூ. 65) என்னுஞ் சூத்திரத்தால்.

51 - 3. தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்மீமிசை நல்யாறு கடல் படர்ந்தா அங்கு யாம் அவண்நின்றும் வருதும் - தூய பூக்கள் நெருங்கின கரையைப்பொருகின்ற ஓக்கத்தினையுடைய மலையுச்சியினின்றும்இழிந்த நல்லயாறு கடலைநோக்கிப் போனாற்போலயாம் அவனை நோக்கிச் சென்று சில பெற்றுவருகின்றேம்;

இனி, 1மலையிற்பொருள்களைவாரிக்கொண்டு யாறு கடலைநோக்கிப்போனாற்போல அவ்விடத்துள்ள பொருள்களைவாரிக்கொண்டு வருகின்றேமென்றுமாம்.

53 - 5. [ நீயிருங், கனிபெழி கானங்கிளையொ டுணீஇய, துனைபறை நிவக்கும் புள்ளின மான :]

கனி பொழி கானம் கிளையொடுஉணீஇய துனை பறை நிவக்கும் புள் இனம் மான : பழங்களைச்சொரிகின்ற காட்டிற் பழங்களைச் சுற்றத்தோடே சென்றுதின்றற்கு விரைந்த பறத்தற்றொழிலிலே ஓங்கும்பறவைத்திரளை யொக்க,

நீயிருமென்பது 2 மேலே கூட்டுதும்.

56. புனை 3 தார் பொலிந்தவண்டு படு மார்பின் - கைசெய்த


1 பெரும்பாண். 427, உரையைப்பார்க்க.

2 மேலே யென்றது 65-ஆம் அடியினுரையை.

3 தார் - மார்பின்மாலை ; " பொலந்தார்மார்பி னெடியோன் "(மதுரைக். 61) ; " தாரொடுபொலிய - தங்கணவர் மார்பின் மாலையோடே அழகுபெற" (மதுரைக். 264 - 6, .)