உடைய முசுண்டை 1ஏனைப் பூதங்கள் தோன்றுதற்குக்காரணமான பெரிய ஆகாயத்திற் 2 கார்த்திகையாகிய மீன்போலவெள்ளிதாக மலர்ந்தன ; 3 ஆரல், ஆலெனவிகாரம். 102 - 6. [நீலத் தன்ன விதைப்புனமருங்கின், மகுளி பாயாது மலிதுளி தழாலி, னகளத் தன்னநிறைசுனைப் புறவிற், கௌவை போகிய கருங்காய்பிடியேழ், நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண் :] பல்கவர் ஈர் எண் நீலத்து அன்ன விதை புனம் மருங்கின் அகளத்துஅன்ன நிறை சுனைபுறவின்மகுளி பாயாது மலிதுளிதழாலின்4 கௌவை போகிய கரு காய் பிடி ஏழ் நெய்கொள ஒழுகின - பலவாகக் கிளைத்த பசிய எள்ளுத் தோடுகளெல்லாம்நீலமணியையொத்த நிறத்தையுடையவாயெழும் படி அவற்றைவிதைத்த கொல்லையின்பக்கத்தில் நீர்ச்சாலையொத்தநிறைந்த சுனைகளையுடைய காட்டிடத்தே அரக்குப்பாயாமல்மிக்க துளி தழுவுகையினாலே இளங்காயாகிய தன்மைபோனகரிய காய் ஒருபிடியிலே ஏழ்காயாக நெய் உள்ளேகொள்ளும்படியாக வளர்ந்தன ; 107 - 8. [பொய்பொரு கயமுனி முயங்குகைகடுப்பக், கொய்பத முற்றன குலவுக்குர லேனல் :] 5பொய்பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப குலவு குரல் ஏனல்கொய் பதம் உற்றன - தம்மில் விளையாடிப்பொருகின்ற யானைக்கன்றுகளின் ஒன்றோடென்றுசேர்ந்தகைகளையொப்பத் தம்மிற் பிணையுங்கதிர்களையுடையதினை அறுக்குஞ் செவ்வியாக முற்றின ; 109 - 10. [ விளைதயிர்ப் பிதிர்வின்வீயுக் கிருவிதொறுங், குளிர்புரை கொடுங்காய் கொண்டனவவரை :] அவரை இருவிதொறும் விளை தயிர் பிதிர்வின்வீ உக்கு குளிர் புரை கொடு காய் கொண்டன - அவரைகள்தினையரிதாள்தோறும் முற்றின தயிரினது பிதிர்ச்சிபோலும்பூக்களுதிர்ந்து அடியிலே அரிவாளை யொக்கும் வளைந்தகாயைக்கொண்டன ;
1 பெரும்பாண். 1, குறிப்புரை. 2 "மழையில் வான மீனணிந் தன்ன,குழையமன் முசுண்டை வாலிய மலர" (அகநா. 264 : 1 -2) 3 "வடவயின் விளங்கா லுறையெழுமகளிருட், கடவு ளொருமீன் சாலினி" (பரி. 5 : 43 - 4 ) என்பதும் , ' ஆரலென்னும் பெயர் ஆலெனக் குறைந்துநின்றது ' என்னுமதனுரையும் இங்கே அறியற்பாலன. 4 மதுரைக். 271, குறிப்புரை. 5 " பொய்பொரு முடங்குகை " (சிலப்.15 : 50) என்றவிடத்து, புரைபொருந்திய வளைந்த கை' என்று அடியார்க்குநல்லார் உரையெழுதியிருத்தலின்பொய்பொரு என்பதைக் கைக்கு அடையாக்கிப்பொருள் கொள்ளலுமாம்.
|