617

குளிர் - கிளிகடிகருவியுமென்ப.

111-3. [மேதி யன்ன கல்பிறங் கியவின்,வாதிகை யன்ன கவைக்கதி ரிறைஞ்சி, யிரும்புகவர்வுற்றன பெரும்புன வரகே : ] பெருபுனம் வரகு மேதி அன்னகல் பிறங்கு இயவின் வாதி கை அன்ன கவை கதிர்இறைஞ்சி இரும்பு கவர்வுற்றன - பெரிய புனத்தில் வரகுகள்எருமை கிடந்தாற்போன்ற கற்பெருத்த வழியிடத்திலேதருக்கங் கூறுகின்றவன் கையிடத்து இணைந்த விரல்களையொத்தஇரட்டித்த கதிர்கள் முற்றி வளைந்து அரிவாளாலேஅரிதலுற்றன ;

114-44. [பால்வார்பு கெழீஇப் பல்கவர்வளிபோழ்பு, வாலிதின் விளைந்தன வைவனம் வெண்ணெல்,வேலீண்டு தொழுதி யிரிவுற்றென்னக் காலுறு துவைப்பிற்கவிழ்க்கனைத் திறைஞ்சிக், குறையறை வாரா நிவப்பி னறையுற்,றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே, புயற்புனிறுபோகிய பூமலி புறவி, னவற்பதங் கொண்டன வம்பொதித்தோரை, தொய்யாது வித்திய துளர்படு துடவை, யையவியமன்ற வெண்காற் செறுவின், மையென விரிந்தன நீணறுநெய்தல் செய்யாப் பாவை வளர்ந்துகவின்,முற்றிக், காயங் கொண்டன விஞ்சி மாவிருந்து,வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும், விழுமிதின்வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை, காழ்மண் டெஃகங்களிற்றுமுகம் பாய்ந்தென, வூழ்மல ரொழிமுகை யுயர்முகந்தோயத், துறுகல் சுற்றிய சோலை வாழை, யிறுகுகுலை முறுகப்பழுத்த பயம்புக், கூழுற் றலமரு முந்தூ ழகலறைக், காலமன்றியு மரம் பயன் கொடுத்தலிற், காலி னுதிர்ந்தனகருங்கனி நாவன், மாறுகொள வொழுகின வூறுநீ ருயவை,நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந், துண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந், தரலை யுக்கன நெடுந்தா ளாசினி, விரலூன்றுபடுக ணாகுளி கடுப்பக், குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்துக்,கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிச், சுரஞ்செல்கோடியர் முழவிற் றூங்கி, முரஞ்சுகொண் டிறைஞ்சினவலங்குசினைப் பலவே :]

பூ மலி புறவில் புயல் புனிறு போகிய(120) அம் 1 பொதி 2 தோரை அவல் பதம்கொண்டன (121) - பூ மிக்க காட்டிடத்தே மழையால் ஈன்றணிமைதீர்ந்துமுற்றிய அழகிய குலையினையுடைய 3 மூங்கில்நெல்அவலிடிக்குஞ் செவ்வியைக் கொண்டன ;

இது மூங்கில்


1 பொதி - பொதிந்தகுலை.

2 தோரை - ஒருவகை நெல்லும் மூங்கில்நெல்லும் ; (மதுரைக். 287, .)

3 இதனை , " அவலவலென்கின்றன நெல்" (தொல். எச்ச. சூ. 26, சே. ந. மேற்.) என்பதுவிளங்கச் செய்கின்றது.