618

ஐயவி (123) தொய்யாது துளர் படு துடவைவித்திய (122) அமன்ற (123)- வெண்சிறுகடுகு உழாதே களைக்கொட்டால்அடிவரைந்து கொத்தும் தோட்டங்களிலே விதைக்கப்பட்டனவாய்நெருங்கி விளைந்தன;

இஞ்சி (126) செய்யா பாவை வளர்ந்துகவின் முற்றி (125) 1காயம் கொண்டன(126)-இஞ்சிமுதல் ஒருவராற் பண்ணப்படாத பாவைகள்வளரப்பட்டு அழகு முதிர்ந்து 2 காழ்ப்பைக்கொண்டன;

கொழு கொடி கவலை (128) குழிதொறும்வயவு பிடி முழந்தாள் கடுப்ப (127) விழுமிதின் 3வீழ்ந்தன (128) - கொழுவிய கொடியினையுடைய கவலை குழிகடோறும்வலிய பிடியின் மடித்த முழந்தாளை யொக்கும்படிசீரிதாகக் கீழே வளர்ந்தன ;

மா இருந்து (126) வீழ்ந்தன (128) -முற்றி மாவாந்தன்மை தம்மிடத்தே உளவாய் வீழ்ந்தன;

காழ் மண்டு எஃகம் களிறுமுகம்பாய்ந்தென (129) - காம்பிலே தைத்த வேல் யானையைக்குத்திற்றென்னும்படியாக,

ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய(130) - துறுகல் சுற்றிய சோலை வாழை (131)- முறைப்பட மலர்தலையொழிந்தமுகைகளினுடைய உயர்ந்த முகங்கள் சென்று தீண்டும்படியாகநெருங்கின மலைகளைச் சூழ்ந்துநின்ற சோலையாகியவாழை.

வேல் யானையைக் குத்தினாற்போலவாழைப்பூ மலையைத்தீண்டி நின்றதென்றுணர்க ; வாழைப்பூஉதிர்ந்து பின்பு உலராதுநிற்றல் இயல்பு.

இறுகு குலை முறுக பழுத்த (132) -காய்நெருங்கின குலை மிகவும் நெகிழும்படி பழுத்தன ;

உந்தூழ் ஊழுற்று (133) பயம் புக்கு (132)அலமரும் (133) - பெருமூங்கில் நெல்லு முற்றுதலுற்றுப் பயன்படுந்தன்மையிலே புகுந்து அசையாநிற்கும் ;

மரம் காலம் அன்றியும் பயன்கொடுத்தலின் (134) - ஆண்டுள்ள மரங்கள் தாம் காலமன்றியும்நிலவிசேடத்தாற் பயனைக்கொடுத்தலின் ,

நாவல் காலின் கரு கனி (135) அகல்அறை (133) உதிர்ந்தன (135) - நாவல் காற்றாலே கரியபழம் அகன்ற பாறையிலே உதிர்ந்தன ;

இது சினைவினை முதலொடு முடிந்தது.


1 காயம் - உறைப்பு ; " உப்பொடுநெய்பா றயிர்காயம் பெய்தடினும் " (நாலடி.116)

2 காழ்ப்பு - உறைப்பு.

3 மதுரைக். 534, குறிப்புரை.