நீர் ஊறு உயவை மாறு கொள ஒழுகின(136) - விடாய்த்த காலத்தில் வாய் நீரூறுதற்குக் காரணமானஉயவைக்கொடி நீரோடே மாறுபாடு கொள்ளும் படி படர்ந்தன; என்றது, தண்ணீர் தேடவேண்டாவென்றவாறு. கூவை 1 நூறொடு குழீஇயின (137) -கூவைக்கிழங்கு நீறாந்தன்மையோடே முற்றித்திரண்டன; தேமா (138) சேறு சிறந்து (137) உண்ணுநர்தடுத்தன (138) - பழமாக்கள் சாறுமிக்கு 2 உண்பாரைவேறொன்றிற் செல்லவொட்டாமல் தடுத்துக்கொண்டன; நெடு தாள் ஆசினி (139) 3 புண்அரிந்து (138) அரலை உக்கன (139) - நெடிய அடியையுடைய ஆசினிப்பலாப்புண்ணாம்படி வெடித்து உள்ளுள்ள விதைகள் சிந்தின ; விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப(140) குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்து (141) - விரல்தீண்டுகின்றமுழங்குங்கண்ணையுடைய சிறுபறையை ஒக்கப் பேராந்தைபேடும்சேவலும் மாறிக் கூப்பிடும் நெடிய மலைப்பக்கத்தே, அலங்கு சினை பலவு (144) கார் வாய்த்துஎதிரி (142) சுரம் செல் கோடியர் முழவின் (143) 4கீழும்மேலும் (142) தூங்கி (143) 5 முரஞ்சு கொண்டு இறைஞ்சின(144) - அசைகின்ற கொம்பினையுடைய பலாக்கள் மழை மிகப்பெய்யப்பட்டுஅதனைத் தாம் ஏற்றுக்கொண்டு வழிபோகின்ற கூத்தருடையமத்தளங்கள்போலே கீழும் மேலுந் தூங்கி முற்றுதல்கொண்டு தாழ்ந்தன ; வெள் கால் செறுவில் (123) -வெள்ளிய அரிதாள்களையுடைய செய்யிலே,
1 நூறு - நீறு. 2 " உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை- தன்னை நுகர்வாரை வேறொன்றை நுகராமற்றடுத்த...........பிண்டி"(மலைபடு. 445, உரை) ; " நெய்த லெருமையி னிரைதடுக்குநவுமென்றது நெய்தலானது அக்கரும்பு முதலாய மற்றோரிரையின் பாங்கரிற்செல்லாது தன்னையேநின்று தின்னும்படி தான்போதவுண்ட எருமைநிரையைத் தடுக்குமிடங்களுமென்றவாறு" (பதிற். 13 : 3 - 4, உரை) ; " செலல் விலங்குதேன்- தன்னைவிட்டுப் போகையை விலக்குந்தேன் " (தக்க.360, உரை) 3 " பசும்பு ணென்றது புண்பட்டவாய்போலப் பழுத்து விழுந்த பழத்தினை " (பதிற்.61 : 1 ) என்பது இங்கே பயன்படும். 4 " வேரு முதலுங் கோடு மொராங்குத்,தொடுத்த போலத் தூங்குபு தொடரிக், கீழ்தாழ் வன்னவீழ்கோட் பலவின் " (குறுந். 257 : 1 - 3) 5 " முரஞ்சன் முதிர்வே " (தொல்.உரி. சூ. 35)
|