621

145. தீயின் அன்ன ஒள் செ காந்தள்- நெருப்பினையொத்த ஒள்ளிய செங்காந்தளினது,

இதற்கு நன்னனென்னும்பெயர் தீயோடடுத்ததன்மையின் , 1 ஆனந்தமாய், பாடினாரும் பாட்டுண்டாரும்இறந்தாரென்று ஆளவந்தபிள்ளையாசிரியர் குற்றங்கூறினாராலெனின்,அவர் அறியாதுகூறினார் ; செய்யுள் செய்த கௌசிகனார் ஆனந்தக்குற்றமென்னுங் குற்றமறியாமற் செய்யுள் செய்தாரேல்,இவர் நல்லிசைப்புலவராகார் ; இவர்செய்த செய்யுளைநல்லிசைப்புலவர்செய்த ஏனைச்செய்யுட்களுடன் சங்கத்தார்கோவாமல் நீக்குவர்; அங்ஙனம் நீக்காது கோத்தற்குக்காரணம் ஆனந்தக்குற்ற மென்பதொரு குற்றம் இச்செய்யுட்குஉறாமையானென்றுணர்க.

இச்சொன்னிலை நோக்குமிடத்துஒருகுற்றமுமின்று ; என்னை ? அன்னவென்னும் அகரவீற்றுப்பெயரெச்ச உவமவுருபு தீயென்னும் பெயரைச் சேர்ந்துநின்றுஇன்சாரியை இடையே அடுத்துநிற்றலின். நன்னனெனநகரமுதலும் னகரவொற்றீறுமாய் நிற்குஞ் சொல்லாயினன்றே அக்குற்றம் உளதாவதெனமறுக்க. நன்னவென அண்மைவிளியாய்நின்றமுன்னிலைப் பெயரென்று குற்றங்கூறுவார்க்கு இப்பாட்டுப்படர்க்கையேயாய் நிற்றலிற் குற்றமின்றென்க.

நூற்குற்றங்கூறுகின்ற 2 பத்துவகைக்குற்றத்தே,3 " தன்னா னொரு பொருள் கருதிக் கூறல்" என்னுங்குற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக்குற்றமென்பதொருகுற்றமென்று நூல்செய்ததன்றி 4 அகத்திய


1ஆனந்தமாய் - ஆனந்தக்குற்றமாகி; ஆனந்தக்குற்றமென்பது எழுத்தானந்தம், சொல்லானந்தம்,பொருளானந்தம், யாப்பானந்தம், தூக்கானந்தம், தொடையானந்தமென அறுவகைப்படும் ; அவற்றுள் இங்கே சொல்லியதுசொல்லானந்தத்திலடங்குமென்பர் ; " இயற்பெயர்மருங்கின் மங்கல மழியத், தொழிற்சொல்புணர்ப்பினது சொல்லானந்தம்" யா - வி. ஒழிபு ;யா - கா ; ஒழிபு. 9 , உரை ; இ - வி. 887.

2 பத்துவகைக்குற்றங்களாவன : "சிதைவெனப் படுபவை வசையற நாடிற், கூறியது கூறன் மாறுகொளக்கூறல், குன்றக் கூறன் மிகை படக்கூறல், பொருளிலமொழிதல் மயங்கக் கூறல், கேட்போர்க்கின்னாயாப்பிற் றாதல், பழித்த மொழியா னிழுக்கங்கூற, றன்னா னொரு பொருள் கருதிக் கூற, லென்ன வகையினுமனங்கோ ளின்மை, யன்ன பிறவு மவற்றுவிரி யாகும்" (தொல். மரபு. சூ. 108)

3 " தன்னானொருபொருள் கருதிக்கூறலென்பது மலைபடுகடாத்தினை ஆனந்தக்குற்றமெனப்பிற்காலத்தானொருவன் ஒரு சூத்திரங்காட்டுதலும்பதமுடிப்பென்பதோர் இலக்கணம் படைத்துக்கோடலும்போல்வன " (தொல். மரபு. சூ. 108, பேர்.)

4 " இனி ஆனந்தவுவமை யென்பனசிலகுற்றம் அகத்தியனார் செய்