623

சிறிய ஊரிலே தங்கிற் கரியபெரிய சுற்றத்தோடே அவ்வுணவுகளை மிகவும் பெறுகுவிர்;

158. [ அன்றவ ணசைஇ யற்சேர்ந் தல்கி:] அசைஇ அன்று அல்சேர்ந்து அவண் அல்கி - அவற்றைப்பெற்றுஇளைப்பாறி அற்றைநாள் இராப்பொழுதும் அவர்களுடனேபொருந்தி அவ்விடத்தே தங்கி,

159 - 60. கன்று எரி ஒள் இணர் கடும்பொடுமலைந்து சேந்த செயலை செப்பம் போகி - கன்றினநெருப்புப்போன்ற ஒள்ளிய பூங்கொத்துக்களைச்சுற்றத்தோடே சூடிச் சிவந்த அசோகமரத்தையுடைய செவ்வியவழியைப்போய்,

161 - 2. அலங்கு கழை நரலும் 1ஆரி படுகர் சிலம்பு அடைந்திருந்த 2 பாக்கம்எய்தி - அசைகின்ற மூங்கிலொலிக்கும் அரிதாயிழியும்வழிகளையுடைய சிலம்பைச் சேர்ந்திருந்த சீறூர்களைச்சேர்ந்து,

163 - 4. நோனா செருவின் வலம் படு நோன்தாள் மானம் விறல் 3வேள் வயிரியம் எனினே- பகைவரைப் பொறாமற் பொரும்போரினையும் வெற்றியுண்டாகும்வலியமுயற்சியினையும் மானத்தையும் வெற்றியையுமுடையநன்னனுடைய கூத்தரேமென்று கூறுவீராயின்,

165. நும் இல் போல நில்லாது புக்கு -நும்முடைய மனைபோல வாசலில்நில்லாதே உள்ளேசென்று,

166. கிழவிர் போல கேளாது கெழீஇ -முன்பே கிழமையுடையீர் போலே அவரைக்கேளாதேஉறவுகொள்ளுகையினாலே,

167. சேண் புலம்பு அகல இனிய கூறி - சேணிடைவந்த நுமது வருத்தந்தீரும்படி இனியமொழிகள் அவர்கூறி,

168. [பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண்வேவையொடு :] பொழிந்த நெய்க்கண் பரூஉ 4குறை வேவையொடு - மிகச்சொரிந்த நெய்யிடத்தேபருத்த தசைகிடந்து வெந்த பொரியலோடே ,

169. குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர்- நிறவிய வடிவினையுடைய தினைச்சோற்றைப் பெறுகுவிர்;

170 - 88 [ ஏறித் தரூஉ மிலங்குமலைத்தாரமொடு , வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல்,குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப், பழஞ்செருக்குற்றநும் மனந்த றீர, வருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்,வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை, முளவுமாத் தொலைச்சியபைந்நிணப் பிளவை, பிணவுநாய் முடுக்கிய தடியொடுவிரைஇ, வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனி,னின்புளிக் கலந்து மாமோ ராகக், கழைவளர் நெல்லினரியுலை யூழ்த்து , வழையமை சாரல் கமழத் துழைஇ,நறுமல ரணிந்த நாறிரு முச்சிக், குறமக ளாக்கிய வாலவிழ்வல்சி, யகமலி


1 ஆரி - அருமையையுடையது.

2 பாக்கம் - பக்கத்திலுள்ளது.

3 வேள் : மலைபடு. 94, .

4 குறை - குறைக்கப்பட்டது.