யுவகை யார்வமொ டளைஇ, மகமுறை தடுப்பமனைதொறும் பெறுகுவிர், செருச்செய் முன்பிற்குருசின் முன்னிய, பரிசின் மறப்ப நீடலு முரியி,ரனைய தன்றவன் மலைமிசை நாடே :]
அவன் மலை மிசை நாடு அனையது அன்று(188) - அந்நன்னனுடைய மலையினது உச்சியில் நாடு யான்முற்கூறிய தன்மைத்தன்று ; மிகவும் சிறப்புடைத்து ;ஆண்டுப் பெறுவனவற்றைக் கேட்பீராக ;
பிணவு நாய் முடுக்கிய தடியொடு (177)வரு விசை தவிர்த்த கடமான் கொழு குறை (175) முளவுமா தொலைச்சியபைந்நிணம் பிளவை (176) விரைஇ (177) - பெண்ணாகிய நாய்ஓடிக்கடித்த உடும்பின் தடிகளோடே ஓடிவருகின்ற விசையைக்கெடுத்துக்கொன்ற கடமானின் கொழுவிய தசையையும்எய்ப்பன்றியைக்கொன்ற பசுத்தநிணத்தையுடையபிளக்கப்பட்ட தசைகளையும் கலந்து,
வேய் பெயல் விளையுள் தே கள் தேறல்(171) குறைவு இன்று பருகி (172) - மூங்கிற்குழாய்க்குள்ளேபெய்தலையுடைய முற்றிய தேனாற்செய்த கட்டெளிவைக்குறைவின்றாக நிரம்பவுண்டு,
நறவு மகிழ்ந்து (172) - பின்னர் 1நெல்லாற்சமைத்த கள்ளை உண்டு மகிழ்ந்து,
முற்படக் கூறிய தசைகளைத் தின்றுஇடையே தேறலைப்பருகிப் பின் நறவுமகிழ்ந்தென்க.
வைகறை (172) பழஞ்செருக்கு உற்ற நும்அனந்தல் தீர (173) - விடியற்காலத்துக்கள்ளுண்டு மகிழ்ச்சியுற்றநும்முடைய மதந்தீரும்படி,
வைகறையனந்தலென்க.
அருவி தந்த பழம் (174) ஊழ்த்து (180)சிதை வெள் காழ் (174) - மா (179) - நீர் கொண்டுவந்தபலாப்பழம் செவ்வியழிந்து உதிர்ந்த வெள்ளியவிதையில் மாவையும்,
வெள் புடை கொண்ட துய் தலை பழனின்(178) இன் புளி (179) உலை (180) மோர் ஆக கலந்து (179) -வெள்ளிய புறத்தைக்கொண்ட ஆரத்தை இடத்தேயுடையபுளியம்பழத்தின் இனிய புளிப்பையும் உலையாக வார்த்தமோருக்கு அளவாகக்கலந்து,
கழை வளர் நெல்லின் அரி (180) வழைஅமை சாரல் கமழ துழைஇ (181) ஆக்கிய (183) - மூங்கிலிலேநின்றுமுற்றிய நெல்லினரிசியைச் சுரபுன்னை நெருங்கியமலைச்சாரலெல்லாம் நாறும்படியாகத் துழாவி ஆக்கிய,
வால் அவிழ் வல்சி (183) - வெள்ளியசோறாகிய உணவை,
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி(182) குறமகள் (183) - நறிய மலரைச் சூடின நாறுகின்றகரிய மயிர்முடியினையுடைய குறச்சாதியின் மகளாக்கியவென்க.
1 நெல்லாற் சமைத்த கள் : பட்டினப்.93, குறிப்புரை.