625

கள்ளுண்டபின்பு அனந்தல்தீரச்சோற்றைப் பெறுகுவிரென்க.

அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ(184) - நெஞ்சுநிறைந்த மகிழ்ச்சியை உடையராய்விருந்தினரைப்பெற்றேமென்னும் ஆசையோடே நெஞ்சுகலந்து,

1மக முறை தடுப்ப மனைதொறும்பெறுகுவிர் (185) - தத்தம் பிள்ளை களைக்கொண்டு முறைசொல்லித் தடுக்கையினாலே மனைகடோறும் பெறுகுவிர் ;

அண்ணன் , அம்மானென்றாற் போல்வனமுறை.

ஏறி தரூஉம் இலங்கும் மலை தாரமொடு(170) - தாங்கள் உச்சி மலையிலே ஏறிக் கொண்டுவரும்விளங்குகின்ற மலையிற் பண்டங்களோடே,

அவை சந்தனம், அகில், பொன், மணிமுதலியன.

தடுப்ப மனைதொறும் தாரத்தோடேவல்சியைப் பெறுகுவிரென்க.

செரு செய் முன்பின் குருசில்முன்னிய (186) பரிசில் மறப்ப நீடலும் உரியிர் (187) -ஆண்டுப்பெற்றவற்றாலே போரைச்செய்கின்ற வலிமையையுடையநன்னனிடத்துப் பெறக்கருதிய பரிசிலை மறக்கும்படிநீட்டித் திருத்தலுமுரியிர் ;

189 - 91. நிரை இதழ் குவளை கடி வீ தொடினும்வரை அரமகளிர் இருக்கை காணினும் உயிர் செல வெம்பிபனித்தலும் உரியிர் - நிரைத்த இதழையுடைய குவளையில்,2 தெய்வம் விரும்புதலிற் கடியவாகிய பூக்களைக்கிட்டினும் ஆண்டை வரையரமகளிருடைய இருப்பைக் காணினும்உயிர் போம்படி வெதும்பி நடுங்குதலுமுரியிராகையினாலேபலநாள் நில்லாது நிலநாடு படர்மின் (192) என வினைமுடிக்க.

இத்துணையும் 3 அசையுநற்புலமும்வல்சியும் சேரக்கூறினார்.

192. 4 [ பலநா ணில்லாது நிலநாடுபடர்மின் :]

193 - 5 . [ 5 விளைபுன நிழத்தலிற்கேழ லஞ்சிப், புழைதொறு


1 " மகமுறை தடுப்ப...............தான்உள்ளேயிருந்து தன் பிள்ளை களைக்கொண்டு நும்மைஅடைவே எல்லாரையும் போகாது விலக்கு கையினாலே ;இனி, பிள்ளைகளை உபசரிக்குமாறு போல உபசரித்து விலக்கவென்றுமாம் " (சிறுபாண். 192, .)

2 " தான் விரும்புதலிற் சுரும்பினமும்மொய்யாத ...........செங்காந்தள் " (முருகு. 43 -4, .)

3 மலைபடு. 67 - 8.

4 இதற்கு உரைகிடைக்கவில்லை ; பலவாகியநாட்கள் தாழ்த்து நில்லாமல் நிலத்திலுள்ள நாட்டுவழியேசென்மினென்க. நிலனொடு என்ற பாடத்திற்குப் பூமிவழியேயென்க.

5 " சிறுகட் பன்றி, யோங்குமலைவியன்புனம் படீஇயர் வீங்கு பொறி, நூழை நுழையும்பொழுதில் " (நற். 98 : 2 - 4)