626

மாட்டிய விருங்க லரும்பொறி, யுடையவாறே :] ஆறே கேழல் விளைபுனம் நிழத்தலின் அஞ்சிபுழைதொறும் மாட்டிய இரு கல் அரு பொறி உடைய - வழிகள்,பன்றி முற்றின தினைப்புனத்தை 1 நொக்குகையினாலேஇதற்கு அஞ்சிச் சில்வழிகடோறும் 2கொளுத்திவைத்தபெரிய கற்பொறிகளையுடைய ; ஆகையினாலே,

195 - 6. [ நள்ளிரு ளலரி, விரிந்தவிடியல் வைகினிர் கழிமின் :] 3நள் இருள் வைகினிர்அலரி விரிந்த விடியல் கழிமின் - செறிந்தஇருட்காலத்தே தங்கினிராய் ஞாயிற்றின்கதிர்விரிந்த விடியற்பொழுதிலே போவீர் ;

197. நளிந்து பலர் வழங்கா செப்பம்துணியின் - செறிந்து பலரும் போகாதவழியைப் போகத்துணிவீராயின்,அவ்விடம்,

198 - 9. [ முரம்புகண் ணுடைந்த பரலவற்போழ்விற், கரந்துபாம் பொடுங்கும் பயம்புமாருளவே :] 4முரம்பு கண் உடைந்த பரல் அவல்போழ்வில் பாம்பு கரந்து ஒடுங்கும் பயம்பும் உளவே- மேட்டுநிலம் தன்னிடத்திலே விண்ட பரலையுடையபள்ளநிலத்திற் பிளப்பிலே பாம்பு மறைந்து கிடக்கும்குழிகளுமுள ;

உம்மையாற் புலி முதலியனவுள்ள குழிகளுங்கொள்க.மார் : அசை.

200. குறிக்கொண்டு மரம் கொட்டி நோக்கி- அப்பயம்பை மனத்தாலே குறித்தல் கொண்டு விலங்கிற்குமரங்களிலேயேறிக் கொட்டிப்பார்த்து,

201. செறி தொடி விறலியர் கை தொழூஉபழிச்ச - செறிந்த வளையினையுடைய விறலியர் அப்பாம்புமனமகிழும்படி கையாற்றொழுது வாழ்த்த,

202. [ வறிதுநெறி யொரீஇ வலஞ்செயாக்கழிமின் :] நெறி வறிது ஒரீஇ வலம் செயா கழிமன் -விலங்குகிடக்கும்வழியைச் சிறிது அகலப்போய்வலப்பக்கத்து வழியை நுமக்கு வழியாகச் செய்து கொண்டுபோவீராக ;

வலம் : ஆகுபெயர்.

203. [ புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ்குறவர் :] புனிறு போகிய புனம் சூழ் குறவர் புலந்து - ஈன்றணிமைதீர்ந்துமுற்றின தினைப்புனத்தைக் காத்தற்குச்சூழ்ந்த குறவர்தினையழிகின்றதற்கு வெறுத்து,

புலர்ந்தென்பது பாடமாயின்,முற்றியென்க.


1 நொக்குகை - உண்டு குறையச்செய்கை.

2 கொளுத்தி - பொருத்தி.

3 நெடுநல், 186 , குறிப்புரை.

4 முரம்பு - பருக்கைக்கல்லாலாகியமேட்டுநிலம்.